• Jan 16 2026

அபிவிருத்திக்குழு கூட்டங்களை குழப்பி நேரத்தை வீணடிக்கும் சில எம்.பிக்கள் -சுனில்ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

Chithra / Jan 14th 2026, 9:16 pm
image

  

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருள்ராஜ் ஒழுங்கமைப்பில் இன்றைய கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பூர்த்தியடையாத திட்டங்களை பூரணபடுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று நீர்பாசனம், விவசாயம், வீதி புரமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் என பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் அவர்கள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆராயப்பட்டது.


அபிவிருத்திக்குழு கூட்டங்களை குழப்பி நேரத்தை வீணடிக்கும் சில எம்.பிக்கள் -சுனில்ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு   சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தெரிவித்தார்.இந்த வருடத்திற்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருள்ராஜ் ஒழுங்கமைப்பில் இன்றைய கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பூர்த்தியடையாத திட்டங்களை பூரணபடுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.இதேபோன்று நீர்பாசனம், விவசாயம், வீதி புரமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் என பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் அவர்கள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆராயப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement