• Nov 24 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அநுரவுக்கு ஆதரவு..!

Sharmi / Sep 7th 2024, 9:40 pm
image

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த நேர்மையான, ஊழலற்ற ஒரு தலைவரான அநுரவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று மாலை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினராகவும், அக் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராகவும் பதவி வகித்த நான், அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துவிட்டு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக செயற்பட்ட நான், சென்ற இரு வருடங்களாக அக்கட்சியின் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான அரசியல் சூழலில் ஏன் நான் திடீரென அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என நீங்கள் நினைக்கக்கூடும்.

இத்தேசம் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 7 தாசப்தத்திலும் இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் இந்நாடும் மக்களும் நன்மையடைவில்லை. நன்மையடைந்தவர்கள் யார் என்பதை இந்நாடு அறியும். இவ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். ஆனால், இன்னுமே மாற்றங்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 9வது ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்டுமென்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.

அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன்.

அத்தோடு, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும் அதற்கான செயற்பாடுகளும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் எந்தவொரு சலுகையும், எதிர்பார்ப்புமின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டதோடு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உயர் பதவிகளில் இருந்த நான் அவற்றை விட்டு கடந்த இரு வருடங்களாக எவ்வித செயல்பாடுகளில் இல்லாமல் ஒதுங்கி இருந்தேன்.

பல்வேறு பிரச்சனைகள் இருந்ததன் காரணமாக அதாவது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் விடயங்கள், கட்சியின் கட்டுக்கோப்பை மீறியது, 20க்கு கை உயர்த்தியது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பான விடயம் மற்றும் எனக்கு தேர்தல் வேட்பாளர் தர மறுத்தமை தொடக்கம் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருந்தது. இவை என்னுள் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றேன்.

ஆனால் நான் குறிப்பிட்ட காலமாக இந்த மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த நிலையில்தான் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதி நான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். மாற்றமாக கட்சியோடு இருந்த முரண்பாட்டு விடயங்கள் இதற்கு ஒரு காரணமாக கூற முடியாது. இந்த முடிவு எனக்குள் நீண்ட நாள் இருந்த எண்ணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அநுரவுக்கு ஆதரவு. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த நேர்மையான, ஊழலற்ற ஒரு தலைவரான அநுரவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.கல்முனையில் நேற்று மாலை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினராகவும், அக் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராகவும் பதவி வகித்த நான், அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துவிட்டு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.2015ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக செயற்பட்ட நான், சென்ற இரு வருடங்களாக அக்கட்சியின் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான அரசியல் சூழலில் ஏன் நான் திடீரென அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என நீங்கள் நினைக்கக்கூடும்.இத்தேசம் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 7 தாசப்தத்திலும் இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் இந்நாடும் மக்களும் நன்மையடைவில்லை. நன்மையடைந்தவர்கள் யார் என்பதை இந்நாடு அறியும். இவ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். ஆனால், இன்னுமே மாற்றங்கள் ஏற்படவில்லை.இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 9வது ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்டுமென்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன்.அத்தோடு, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும் அதற்கான செயற்பாடுகளும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் எந்தவொரு சலுகையும், எதிர்பார்ப்புமின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டதோடு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உயர் பதவிகளில் இருந்த நான் அவற்றை விட்டு கடந்த இரு வருடங்களாக எவ்வித செயல்பாடுகளில் இல்லாமல் ஒதுங்கி இருந்தேன். பல்வேறு பிரச்சனைகள் இருந்ததன் காரணமாக அதாவது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் விடயங்கள், கட்சியின் கட்டுக்கோப்பை மீறியது, 20க்கு கை உயர்த்தியது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பான விடயம் மற்றும் எனக்கு தேர்தல் வேட்பாளர் தர மறுத்தமை தொடக்கம் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருந்தது. இவை என்னுள் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றேன்.ஆனால் நான் குறிப்பிட்ட காலமாக இந்த மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த நிலையில்தான் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதி நான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். மாற்றமாக கட்சியோடு இருந்த முரண்பாட்டு விடயங்கள் இதற்கு ஒரு காரணமாக கூற முடியாது. இந்த முடிவு எனக்குள் நீண்ட நாள் இருந்த எண்ணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement