• Mar 29 2024

32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா? – சஜித்திடம் ஆளும்கட்சி எம்.பி. கேள்வி samugammedia

Chithra / May 24th 2023, 3:30 pm
image

Advertisement

ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும், மின்சாரசபை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டே ஆணைக்குழுவின் தலைவராக ஜனக ரத்நாயக்க நியமிக்கப்பட்டார் என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் நலன்களை சிந்தித்தே தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்கியபோது, ஜனக ரத்நாயக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கினார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா – சஜித்திடம் ஆளும்கட்சி எம்.பி. கேள்வி samugammedia ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும், மின்சாரசபை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டே ஆணைக்குழுவின் தலைவராக ஜனக ரத்நாயக்க நியமிக்கப்பட்டார் என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.மேலும் மக்களின் நலன்களை சிந்தித்தே தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்கியபோது, ஜனக ரத்நாயக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கினார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement