• Mar 20 2025

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு; அங்கஜன் அறிவிப்பு..!

Sharmi / Feb 10th 2025, 3:20 pm
image

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தையிட்டியில் பொதுமக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து வருகிறார்கள்.

 கடந்த காலத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயற்பட்ட காலத்தில், வலி வடக்கு பிரதேச செயலாளருடன் இணைந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை அமைக்கும் பணியை நிறுத்தும்படி  ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம். 

தொடர்ந்து நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இணைத்தலைவராக ஆளுநரும் மற்றும் மாவட்ட செயலாளரும் இணைந்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி ஏக மனதாக முடிவு எடுத்து கூறியிருந்தோம்.

அதன்பின்னதாக 04.05.2023 அன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டோரை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நான் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தேன். 

தொடர்ந்து நேரடியாக போராட்ட களத்துக்கு சென்று கட்சி அரசியல் கடந்து எனது ஆதரவை அவர்களுக்கு கொடுத்திருந்தேன்.

இத்தகையை சூழலில், தொடர்ச்சியாக தமது நிலத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், புதிய ஆட்சியாளர்கள் அதனை மீட்டுத்தருவார்கள் என பெரும் நம்பிக்கையோடு காத்திருந்த நிலையில், அண்மைய (31.01.2025) மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் இடம்பெற்ற திட்டமிட்ட குழப்பங்களும், அதைத்தொடர்ந்து காணியை அபகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்படுவதும் பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் எவருக்கும் தெரியாமல் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட கட்டுமானத்துக்கு எதிரான நடவடிக்கையை 1982 ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைகள் சடடத்தினூடாக வலி வடக்கு பிரதேச சபை முன்னெடுக்க தவறிய நிலையில், தற்போது அந்த கட்டுமானத்துக்கு சட்டவலு கொடுக்கும் செயற்பாடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னடுத்து வருகிறார்கள்.

சட்டவிரோத கட்டிடத்தால் காணியை இழந்த மக்களுக்கு மாற்றுக்காணி கொடுப்பது தொடர்பிலும், நஸ்டஈடு கொடுப்பது தொடர்பிலும் இப்போது சில தரப்புகள் மும்முரம் காட்டுகின்றன. அத்தகைய தரப்பில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பது சற்றும் ஏற்கமுடியாதது.

அதேநேரம் பிரச்சனையை திசைதிருப்பும் நோக்கில் அடுத்தவர்கள் மீது அவதூறுகளையும் பொய்களையும் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்புகள் குறித்தும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். தமது கையாலாகத்தனத்தை அடுத்தவர்மீது திருப்பிவிட்டு தப்பித்துக்கொள்ள குறித்த தரப்புகள் மிகத்தீவிரமாக முயன்றுவருகிறார்கள்.

எனவே, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலி வடக்கை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், உயர்பாதுகாப்பு வலயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியிலும், எப்போதும் மக்களுக்கான பலமாக இருப்பவன் என்ற ரீதியிலும் முன்னரை போன்று எப்போதும் எனது ஆதரவு இருக்கும் என்பதை ஊடகங்கள் ஊடாக அனைவருக்கும் அறியத்தருகிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு; அங்கஜன் அறிவிப்பு. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தையிட்டியில் பொதுமக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த காலத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயற்பட்ட காலத்தில், வலி வடக்கு பிரதேச செயலாளருடன் இணைந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை அமைக்கும் பணியை நிறுத்தும்படி  ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம். தொடர்ந்து நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இணைத்தலைவராக ஆளுநரும் மற்றும் மாவட்ட செயலாளரும் இணைந்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி ஏக மனதாக முடிவு எடுத்து கூறியிருந்தோம்.அதன்பின்னதாக 04.05.2023 அன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டோரை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நான் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தேன். தொடர்ந்து நேரடியாக போராட்ட களத்துக்கு சென்று கட்சி அரசியல் கடந்து எனது ஆதரவை அவர்களுக்கு கொடுத்திருந்தேன்.இத்தகையை சூழலில், தொடர்ச்சியாக தமது நிலத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், புதிய ஆட்சியாளர்கள் அதனை மீட்டுத்தருவார்கள் என பெரும் நம்பிக்கையோடு காத்திருந்த நிலையில், அண்மைய (31.01.2025) மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் இடம்பெற்ற திட்டமிட்ட குழப்பங்களும், அதைத்தொடர்ந்து காணியை அபகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்படுவதும் பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் எவருக்கும் தெரியாமல் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட கட்டுமானத்துக்கு எதிரான நடவடிக்கையை 1982 ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைகள் சடடத்தினூடாக வலி வடக்கு பிரதேச சபை முன்னெடுக்க தவறிய நிலையில், தற்போது அந்த கட்டுமானத்துக்கு சட்டவலு கொடுக்கும் செயற்பாடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னடுத்து வருகிறார்கள்.சட்டவிரோத கட்டிடத்தால் காணியை இழந்த மக்களுக்கு மாற்றுக்காணி கொடுப்பது தொடர்பிலும், நஸ்டஈடு கொடுப்பது தொடர்பிலும் இப்போது சில தரப்புகள் மும்முரம் காட்டுகின்றன. அத்தகைய தரப்பில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பது சற்றும் ஏற்கமுடியாதது.அதேநேரம் பிரச்சனையை திசைதிருப்பும் நோக்கில் அடுத்தவர்கள் மீது அவதூறுகளையும் பொய்களையும் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்புகள் குறித்தும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். தமது கையாலாகத்தனத்தை அடுத்தவர்மீது திருப்பிவிட்டு தப்பித்துக்கொள்ள குறித்த தரப்புகள் மிகத்தீவிரமாக முயன்றுவருகிறார்கள்.எனவே, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலி வடக்கை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், உயர்பாதுகாப்பு வலயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியிலும், எப்போதும் மக்களுக்கான பலமாக இருப்பவன் என்ற ரீதியிலும் முன்னரை போன்று எப்போதும் எனது ஆதரவு இருக்கும் என்பதை ஊடகங்கள் ஊடாக அனைவருக்கும் அறியத்தருகிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement