• Nov 19 2024

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நல்வாழ்வுக்கு ஆதரவு : ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் உறுதி

Tharmini / Nov 17th 2024, 9:49 am
image

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ்,

நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள்,

அத்துடன் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை.

வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை என்பவை பற்றி வெளிப்படுத்தினார்.

மேலும், இலங்கையின் வெற்றிகரமான பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் டெல்கோஷ், 

இந்தத் தேர்தல் நாட்டின் வலுவான ஜனநாயக மரபுகளுக்குச் சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

டெல்கோஷ் தனது அறிக்கையில், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலியுறுத்தினார்.

மேலும் புதிய அரசியல் சகாப்தம் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

புதிய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவுகளுக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார். 

இலங்கையுடனான தனது பங்காளித்துவத்தை ஆழமாக்குவதற்கும் , நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் ஈரானின் உறுதிப்பாட்டை ஈரானியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நல்வாழ்வுக்கு ஆதரவு : ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் உறுதி இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ், நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள், அத்துடன் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை.வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை என்பவை பற்றி வெளிப்படுத்தினார்.மேலும், இலங்கையின் வெற்றிகரமான பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் டெல்கோஷ், இந்தத் தேர்தல் நாட்டின் வலுவான ஜனநாயக மரபுகளுக்குச் சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்கோஷ் தனது அறிக்கையில், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலியுறுத்தினார்.மேலும் புதிய அரசியல் சகாப்தம் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவுகளுக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார். இலங்கையுடனான தனது பங்காளித்துவத்தை ஆழமாக்குவதற்கும் , நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் ஈரானின் உறுதிப்பாட்டை ஈரானியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement