• Dec 14 2024

சூரியபுர மஹாவலிபுர வித்தியாலய மாணவர்களின் சமூக நல்லிணக்க விஜயம் !

Tharmini / Nov 9th 2024, 10:13 am
image

திருகோணமலை, சூரியபுர, மஹாவலிபுர வித்தியாலய  மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று  (08) இரவு தோப்பூர் பகுதிக்கு சமூக நல்லிணக்க விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன்போது தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் வரவேற்கப்பட்டனர். இதன் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பாகவும், இஸ்லாமிய கடமைகள் தொடர்பாக கேட்டறிந்து விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

இதன்போது குறித்த பள்ளிவாசல் நிருவாகத்தினர், மௌலவிமார்கள், இரண்டாம் மொழி ஆசிரியர் எஸ்.டி.ஹிஸாம் ஆகியோர் வருகை தந்த சிங்கள சகோதர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சூரியபுர மஹாவலிபுர வித்தியாலய மாணவர்களின் சமூக நல்லிணக்க விஜயம் திருகோணமலை, சூரியபுர, மஹாவலிபுர வித்தியாலய  மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று  (08) இரவு தோப்பூர் பகுதிக்கு சமூக நல்லிணக்க விஜயத்தை மேற்கொண்டனர்.இதன்போது தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் வரவேற்கப்பட்டனர். இதன் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பாகவும், இஸ்லாமிய கடமைகள் தொடர்பாக கேட்டறிந்து விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.இதன்போது குறித்த பள்ளிவாசல் நிருவாகத்தினர், மௌலவிமார்கள், இரண்டாம் மொழி ஆசிரியர் எஸ்.டி.ஹிஸாம் ஆகியோர் வருகை தந்த சிங்கள சகோதர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement