பரீட்சைக்கு முன்னதாக வினாக்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வடமத்திய மாகாணத்தில் காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த தரம் 11க்கான தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பௌத்தம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களும் இன்று முதல் நடைபெறவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் சமன்குமார தெரிவித்தார்.
அத்துடன், இந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு பரீட்சை தினத்தன்று சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பரீட்சைக்கான வினாத்தாள்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் தெரிவித்தார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று ஆரம்பம் பரீட்சைக்கு முன்னதாக வினாக்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வடமத்திய மாகாணத்தில் காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த தரம் 11க்கான தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பௌத்தம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களும் இன்று முதல் நடைபெறவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் சமன்குமார தெரிவித்தார். அத்துடன், இந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு பரீட்சை தினத்தன்று சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், பரீட்சைக்கான வினாத்தாள்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு விசேட காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் தெரிவித்தார்.