• Apr 04 2025

இலங்கை இந்திய உறவுக்கு நடுவில் தொடரும் சந்தேகக்கோடு! சிறீதரன் எம்.பி வெளிப்படை

Chithra / Apr 3rd 2025, 8:52 am
image

 

வெளிப்படையில் அன்னியோன்னியமாக தெரிந்தாலும் இலங்கை இந்திய உறவு சந்தேகக் கோடுகளோடுதான் பயணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து நெடுந்தீவில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மொத்த இலங்கையையும் தன்னுடைய செயல்திறனுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.

ஆனால் ஈழத்தமிழர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழுகிறார்கள்.

இலங்கைக்கு இந்தியா மீதான பற்றும் நம்பிக்கையும் சீனா மீது கொண்டிருக்கிற பற்றும் நம்பிக்கையையும் விட குறைவானதே.

இந்தியா மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்களைத் தாக்குவதற்கு காரணமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்குள் வருகிறார்கள் என்கின்ற காரணத்தினாலேயே வடபகுதிகளில் இராணுவ காவல் முகாம்களை அமைத்தார்கள்.

இதேவேளை ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தய் அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அழுத்தம் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். 

இலங்கை இந்திய உறவுக்கு நடுவில் தொடரும் சந்தேகக்கோடு சிறீதரன் எம்.பி வெளிப்படை  வெளிப்படையில் அன்னியோன்னியமாக தெரிந்தாலும் இலங்கை இந்திய உறவு சந்தேகக் கோடுகளோடுதான் பயணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து நெடுந்தீவில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.மொத்த இலங்கையையும் தன்னுடைய செயல்திறனுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.ஆனால் ஈழத்தமிழர்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழுகிறார்கள்.இலங்கைக்கு இந்தியா மீதான பற்றும் நம்பிக்கையும் சீனா மீது கொண்டிருக்கிற பற்றும் நம்பிக்கையையும் விட குறைவானதே.இந்தியா மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்களைத் தாக்குவதற்கு காரணமாக உள்ளது.இந்தியாவில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்குள் வருகிறார்கள் என்கின்ற காரணத்தினாலேயே வடபகுதிகளில் இராணுவ காவல் முகாம்களை அமைத்தார்கள்.இதேவேளை ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தய் அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அழுத்தம் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement