• Apr 22 2025

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல் -ஒருவர் படுகாயம்

Thansita / Apr 20th 2025, 8:02 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்றையதினம் மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது  அது வாக்குவாதமாக மாறி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல் -ஒருவர் படுகாயம் யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்றையதினம் மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது  அது வாக்குவாதமாக மாறி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுதாக்குதலில் படுகாயம் அடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement