• Nov 19 2024

எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி- வஜிர அபேவர்தன புகழாரம்..!

Sharmi / Aug 24th 2024, 10:34 am
image

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள, சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழ்ந்துள்ளார் 

அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

“தலதா அத்துகோரளவின் உரை ஏனையோருக்கும் முன்தாரியாக அமைந்துள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அவர் தோற்றால் அது நாட்டின் தோல்வியாகவே அமையும்.

மக்கள் பிரதிநிதிகள்மீது, மக்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்பலாம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலென்பது பரிசீலித்து பார்ப்பதற்குரிய காலம் அல்ல எனவும்  தெரிவித்தார்.

எம்.பி பதவியை துறந்த தலதா அத்துகோரள இரும்பு பெண்மணி- வஜிர அபேவர்தன புகழாரம். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள, சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழ்ந்துள்ளார் அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.“தலதா அத்துகோரளவின் உரை ஏனையோருக்கும் முன்தாரியாக அமைந்துள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அவர் தோற்றால் அது நாட்டின் தோல்வியாகவே அமையும்.மக்கள் பிரதிநிதிகள்மீது, மக்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்பலாம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலென்பது பரிசீலித்து பார்ப்பதற்குரிய காலம் அல்ல எனவும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement