• Apr 01 2025

இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை , மீனவர்களை ஏமாற்றும் வித்தை - யாழ். மீனவர்கள் கடும் எதிர்ப்பு

Thansita / Mar 27th 2025, 6:28 pm
image

இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கும் இலங்கை மீனவர்களுக்குமிடையே சந்திப்பு நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது

இச்சந்திப்பிற்கு யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாசத்தின் அலுவலகத்தில் மீனவர்கள் இன்றையதினம்  ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தனர்.

இதில் மேலும் தெரிவிக்கையில் 

மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாயின் யாழ் மாவட்டத்திலுள்ள மீனவ சங்கங்களின் தலைமைப் பீடங்களுடனேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்தார்.

கடற்றொழில் மாவட்டமாக இல்லாத வவுனியாவில் நேற்றையதினம் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையானது வடபகுதி மீனவர்களை வஞ்சிக்கும் செயற்பாடு என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

இப்படியான அரசசார்பற்ற அமைப்புக்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இநந்த விடயத்தை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் இந்த விடயங்களை கணக்கிலெடுக்க கூடாது எனவும் குறிப்பிட்டனர்

இந்திய - இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை , மீனவர்களை ஏமாற்றும் வித்தை - யாழ். மீனவர்கள் கடும் எதிர்ப்பு இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கும் இலங்கை மீனவர்களுக்குமிடையே சந்திப்பு நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்றதுஇச்சந்திப்பிற்கு யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாசத்தின் அலுவலகத்தில் மீனவர்கள் இன்றையதினம்  ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தனர்.இதில் மேலும் தெரிவிக்கையில் மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாயின் யாழ் மாவட்டத்திலுள்ள மீனவ சங்கங்களின் தலைமைப் பீடங்களுடனேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்தார்.கடற்றொழில் மாவட்டமாக இல்லாத வவுனியாவில் நேற்றையதினம் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையானது வடபகுதி மீனவர்களை வஞ்சிக்கும் செயற்பாடு என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.இந்த செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.இப்படியான அரசசார்பற்ற அமைப்புக்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இநந்த விடயத்தை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் இந்த விடயங்களை கணக்கிலெடுக்க கூடாது எனவும் குறிப்பிட்டனர்

Advertisement

Advertisement

Advertisement