• Apr 28 2025

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு

Thansita / Apr 27th 2025, 4:35 pm
image

எந்தவொரு நிபந்தனைகள் இன்றி உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம், உக்ரைனுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மாஸ்கோ சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், "நேற்று அமெரிக்கத் தூதர் விட்காஃப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனுடன் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் இந்த கருத்தை இதற்கு முன்பும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த அறிவிப்பு, உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்வியை உலக அரங்கில் எழுப்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில்,  போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் இருந்தபோது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ரஷ்யாவுடனான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு எந்தவொரு நிபந்தனைகள் இன்றி உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம், உக்ரைனுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மாஸ்கோ சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், "நேற்று அமெரிக்கத் தூதர் விட்காஃப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனுடன் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.ரஷ்ய அதிபர் இந்த கருத்தை இதற்கு முன்பும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த அறிவிப்பு, உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்வியை உலக அரங்கில் எழுப்பியுள்ளது.இந்த சூழ்நிலையில்,  போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் இருந்தபோது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ரஷ்யாவுடனான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement