• Oct 30 2024

Tharmini / Oct 30th 2024, 1:47 pm
image

Advertisement

திருகோணமலை , தம்பலகாமம் பிரதேச சாகித்தியா விழா நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலை கலாசாரம் பாரம்பரியத்தை எடுத்து காட்டி கடந்த காலங்களில் பணியாற்றிய  சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். பாடசாலை மாணவ மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.பரிசில்கள் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கணக்காளர் எஸ்.செல்வதாஸ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






தம்பலகாமம் பிரதேச சாஹித்திய விழா திருகோணமலை , தம்பலகாமம் பிரதேச சாகித்தியா விழா நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் கலந்து சிறப்பித்தார்.இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலை கலாசாரம் பாரம்பரியத்தை எடுத்து காட்டி கடந்த காலங்களில் பணியாற்றிய  சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். பாடசாலை மாணவ மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.பரிசில்கள் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கணக்காளர் எஸ்.செல்வதாஸ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement