• Nov 23 2024

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எனது கருத்து எடுபடவில்லை - யாழில் சீ.வி.கே.சிவஞானம் கவலை

Anaath / Sep 6th 2024, 6:43 pm
image

ஐக்கிய மக்கள் சக்தி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவை சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நாங்கள் கட்சி ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்  என தான் கூறிய கருத்தை  மத்திய குழு கூட்டத்தில் ஏற்கவில்லை என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழரசு கட்சியினுடைய யாப்பிலே மத்திய செயல் கூட்டத்துக்கு எத்தனை நாள் அறிவித்தல் வழங்கப்பட்டது என்பது தொடர்பான ஏற்பாடு இல்லை. ஆகவே எவ்வளவு வேண்டுமென்றாலும் மத்திய செயல் குழு கூடுவதற்குரிய உரித்து உண்டு.

ஆனால் பொதுவாகவே 4 நாட்களுக்கு மேற்பட்ட அறிவித்தல்களை வழங்கி வந்திருக்கிறோம்.  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்கனவே  நான்கு கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

ஆகவே  முதலாம் திகதி நடைபெற்ற கூட்டம் அதனை நான்கு கூட்டங்களின் தொடர்ச்சியான கூட்டம். ஆகவே இது ஒத்திவைக்க பட்ட கூட்டம். அதாவது முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளருடைய விஞ்ஞாபானங்களை பரிசீலித்து சபைக்கு அறிவிக்க வேண்டும் என 18 ஆம் திகதி மத்திய செயல் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதில்இதில் நானும்,  மாவை சேனாதிராஜா, பொது செயலாளர்சத்திய லிங்கம், சுமந்திரன் சிறீதரன் மற்றும் ஆகியோர் இருந்தோம்.

 அதனை தொடர்ந்து மாவை சேனாதிராஜா தாமாகவே சுமந்திரனிடம் அவ்வாறான ஒரு அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டியிருந்தார். அந்த அறிக்கை தான் கடைசியாக நடந்த கூட்டத்திலே சுமந்திரனால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆகவே இந்த கூட்டங்கள் இரண்டு விடயங்களில் தொடர்ந்து நடந்தது. ஒன்று பொது வேட்பாளர், மற்றது ஜனாதிபதி தேர்தல்.

பொது வேட்பாளர் சம்பந்தமாக இந்த கூட்டத்த்திலே எங்களுடைய மொத்த எண்ணிக்கை 41 அதிலே எனக்கு தெரிந்த அளவிலே சம்பந்தனும் ,  செல்வராஜாவும் காலமாகிவிட்டதால் அந்த எண்னிக்கை 39 ஆக குறைவடைந்து. அந்த கூட்டத்திலே  26 பேர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

இப்பொழுது வாக்களிப்பு எண்ணிக்கை என்பது சமூகமளித்து வாக்களிப்பது தான் கணக்கில் எடுக்கப்படும்.  எங்களது யாப்பின் படி ஆக குறைந்தது 11 என்பது தான் நிறைவெண்  என்றால் என்றால் கோரம். 26 பேர் பிரசன்னமாக இருந்த கூட்டமாக அது இருந்திருக்கிறது. 

முதலிலே பொது வேட்பாளர் சம்பந்தமாக கலந்துரையாடிய போது கிட்டத்தட்ட 18 பேர் பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை எனதெரிவித்ததுடன் அங்கு    பிரசன்னமாக இருந்த   நால்வர் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்று தெரிவித்தார்கள். ஆகவே பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்று முடிவாகியது. அதற்கிடையில் அறியநேந்திரனை இந்த போட்டியிலிருந்து விலகுமாறு ஒரு கருத்து சொல்லப்பட்டது. 

அடுத்ததாக சுமந்திரன் மாவையினால் கோரப்பட்டு தான் தயாரித்து வாட்சப்பில் குறிப்பானவர்களுக்கு  அறிக்கையை பகிரப்பட்டு அந்த  அறிக்கையை முன்வைத்தார்.  அந்த அறிக்கையானது குறிப்பாக அனுரகுமாரதிசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனங்களிலே இருக்க கூடிய சுருக்கமான 6 அல்லது 7  இவ்வாறான விடயங்கள் உள்ளதென சுட்டிக்காட்டி விவாதித்து இறுதியாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 

இக்கருத்துக்கு அநேகமாக எல்லோரும் அதற்கு ஆதரவான கருத்தை சொன்னார்கள். அதே நேரம் நான் ஏற்கனவே சொன்னபடி இந்த முடிவை மக்களுக்கு விடலாம் என்ற கருத்தை சொல்லியிருந்தேன் . ஆனால் அதனை ஆதரித்தாது இரண்டு பேர் தான். அதனோடு அந்த கருத்து எடுபடவில்லை. 

சஜித் பிரேமதாசாவினுடைய முன்மொழிவை ஏனைய இரண்டு பேரில் எவருமே பேசவில்லை. 

சாதக, பாதகமாக அனுரகுமார திஸாநாயக்கவோ, ரானிலோ பேசவில்லை. சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது.

அந்த தீர்மானத்தை எல்லோரும் பெரும்பான்மையாக ஆதரவளித்தால் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் கட்சி என்ற ரீதியிலே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நாங்கள் கட்சி ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்ற கருத்தை நான் முன்வைத்தேன். 

அந்த கருத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து சஜித்தை   ஆதரித்து  கருத்து பிரச்சாரத்தில் பங்கு பற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக சொல்லப்பட்டது. ஆகவே அப்படியிருந்தாலும் என்னை பொறுத்த வரையிலே கட்சியினுடைய தீர்மானத்துக்கு உடன்படுகிறேன். ஆனால் பிரச்சாரத்திலேயோ அல்லது மேடைகளிலேயோ நான் பங்கு பற்ற மாட்டேன் என்று சொல்லிக்கொண்ட பொழுதில் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

முடிவை முன்மொழிந்தது வவுனியாவை சேர்ந்த உ றுப்பினர் சேனாதிராஜா.அதனை வழி   மொழிந்தது யாழ்ப்பாணத்தை சேர்ந்த பரஞ்சோதி.பெரும்பான்மையான அங்கத்தவர்களின் அங்கீகாரத்தோடு ஆதரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. என அவர் தெரிவித்துள்ளார்.


தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எனது கருத்து எடுபடவில்லை - யாழில் சீ.வி.கே.சிவஞானம் கவலை ஐக்கிய மக்கள் சக்தி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவை சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நாங்கள் கட்சி ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்  என தான் கூறிய கருத்தை  மத்திய குழு கூட்டத்தில் ஏற்கவில்லை என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.யாழில் இன்று இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினுடைய யாப்பிலே மத்திய செயல் கூட்டத்துக்கு எத்தனை நாள் அறிவித்தல் வழங்கப்பட்டது என்பது தொடர்பான ஏற்பாடு இல்லை. ஆகவே எவ்வளவு வேண்டுமென்றாலும் மத்திய செயல் குழு கூடுவதற்குரிய உரித்து உண்டு.ஆனால் பொதுவாகவே 4 நாட்களுக்கு மேற்பட்ட அறிவித்தல்களை வழங்கி வந்திருக்கிறோம்.  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்கனவே  நான்கு கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.ஆகவே  முதலாம் திகதி நடைபெற்ற கூட்டம் அதனை நான்கு கூட்டங்களின் தொடர்ச்சியான கூட்டம். ஆகவே இது ஒத்திவைக்க பட்ட கூட்டம். அதாவது முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளருடைய விஞ்ஞாபானங்களை பரிசீலித்து சபைக்கு அறிவிக்க வேண்டும் என 18 ஆம் திகதி மத்திய செயல் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதில்இதில் நானும்,  மாவை சேனாதிராஜா, பொது செயலாளர்சத்திய லிங்கம், சுமந்திரன் சிறீதரன் மற்றும் ஆகியோர் இருந்தோம். அதனை தொடர்ந்து மாவை சேனாதிராஜா தாமாகவே சுமந்திரனிடம் அவ்வாறான ஒரு அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டியிருந்தார். அந்த அறிக்கை தான் கடைசியாக நடந்த கூட்டத்திலே சுமந்திரனால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவே இந்த கூட்டங்கள் இரண்டு விடயங்களில் தொடர்ந்து நடந்தது. ஒன்று பொது வேட்பாளர், மற்றது ஜனாதிபதி தேர்தல்.பொது வேட்பாளர் சம்பந்தமாக இந்த கூட்டத்த்திலே எங்களுடைய மொத்த எண்ணிக்கை 41 அதிலே எனக்கு தெரிந்த அளவிலே சம்பந்தனும் ,  செல்வராஜாவும் காலமாகிவிட்டதால் அந்த எண்னிக்கை 39 ஆக குறைவடைந்து. அந்த கூட்டத்திலே  26 பேர் பிரசன்னமாகியிருந்தார்கள்.இப்பொழுது வாக்களிப்பு எண்ணிக்கை என்பது சமூகமளித்து வாக்களிப்பது தான் கணக்கில் எடுக்கப்படும்.  எங்களது யாப்பின் படி ஆக குறைந்தது 11 என்பது தான் நிறைவெண்  என்றால் என்றால் கோரம். 26 பேர் பிரசன்னமாக இருந்த கூட்டமாக அது இருந்திருக்கிறது. முதலிலே பொது வேட்பாளர் சம்பந்தமாக கலந்துரையாடிய போது கிட்டத்தட்ட 18 பேர் பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை எனதெரிவித்ததுடன் அங்கு    பிரசன்னமாக இருந்த   நால்வர் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்று தெரிவித்தார்கள். ஆகவே பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்று முடிவாகியது. அதற்கிடையில் அறியநேந்திரனை இந்த போட்டியிலிருந்து விலகுமாறு ஒரு கருத்து சொல்லப்பட்டது. அடுத்ததாக சுமந்திரன் மாவையினால் கோரப்பட்டு தான் தயாரித்து வாட்சப்பில் குறிப்பானவர்களுக்கு  அறிக்கையை பகிரப்பட்டு அந்த  அறிக்கையை முன்வைத்தார்.  அந்த அறிக்கையானது குறிப்பாக அனுரகுமாரதிசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனங்களிலே இருக்க கூடிய சுருக்கமான 6 அல்லது 7  இவ்வாறான விடயங்கள் உள்ளதென சுட்டிக்காட்டி விவாதித்து இறுதியாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இக்கருத்துக்கு அநேகமாக எல்லோரும் அதற்கு ஆதரவான கருத்தை சொன்னார்கள். அதே நேரம் நான் ஏற்கனவே சொன்னபடி இந்த முடிவை மக்களுக்கு விடலாம் என்ற கருத்தை சொல்லியிருந்தேன் . ஆனால் அதனை ஆதரித்தாது இரண்டு பேர் தான். அதனோடு அந்த கருத்து எடுபடவில்லை. சஜித் பிரேமதாசாவினுடைய முன்மொழிவை ஏனைய இரண்டு பேரில் எவருமே பேசவில்லை. சாதக, பாதகமாக அனுரகுமார திஸாநாயக்கவோ, ரானிலோ பேசவில்லை. சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது.அந்த தீர்மானத்தை எல்லோரும் பெரும்பான்மையாக ஆதரவளித்தால் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் கட்சி என்ற ரீதியிலே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நாங்கள் கட்சி ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அந்த கருத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து சஜித்தை   ஆதரித்து  கருத்து பிரச்சாரத்தில் பங்கு பற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக சொல்லப்பட்டது. ஆகவே அப்படியிருந்தாலும் என்னை பொறுத்த வரையிலே கட்சியினுடைய தீர்மானத்துக்கு உடன்படுகிறேன். ஆனால் பிரச்சாரத்திலேயோ அல்லது மேடைகளிலேயோ நான் பங்கு பற்ற மாட்டேன் என்று சொல்லிக்கொண்ட பொழுதில் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.முடிவை முன்மொழிந்தது வவுனியாவை சேர்ந்த உ றுப்பினர் சேனாதிராஜா.அதனை வழி   மொழிந்தது யாழ்ப்பாணத்தை சேர்ந்த பரஞ்சோதி.பெரும்பான்மையான அங்கத்தவர்களின் அங்கீகாரத்தோடு ஆதரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement