முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
அதன்படி இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தின் அருகில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலமையில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரசு கட்சியினரால் நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. அதன்படி இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தின் அருகில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலமையில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.