• Nov 19 2024

தமிழ் வேட்பாளர் விவகாரம்; தமிழரசுக் கட்சி விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்! விக்கினேஸ்வரன் கோரிக்கை

Chithra / Aug 16th 2024, 8:22 am
image


தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா. அரியநேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை. தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியநேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். வெளிப்படையாக இதனை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுக்கிறார்கள். ஆகவே, இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். என்றார். 

தமிழ் வேட்பாளர் விவகாரம்; தமிழரசுக் கட்சி விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் விக்கினேஸ்வரன் கோரிக்கை தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா. அரியநேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை. தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியநேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். வெளிப்படையாக இதனை குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால், ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுக்கிறார்கள். ஆகவே, இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement