• Nov 28 2024

இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில் துறையாக வளர வேண்டும்- அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 19th 2024, 9:09 am
image

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என புத்தசாசன மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட அனுகூலங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிடும் பணியை முன்னெடுக்க வேண்டுமென விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2004/2005 காலப்பகுதியில் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதுடன், தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில் துறையாக வளர வேண்டும்- அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என புத்தசாசன மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட அனுகூலங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.இந்த விடயத்தில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிடும் பணியை முன்னெடுக்க வேண்டுமென விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2004/2005 காலப்பகுதியில் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதுடன், தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement