• May 08 2024

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு- சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர்!samugammedia

Sharmi / Apr 26th 2023, 10:51 am
image

Advertisement

சிங்கப்பூரில் போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு  வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை இறுதியாக நிறைவேற்றப்பட்டு 6 மாத காலங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தங்கராஜூ சுப்பையா என்பவரே இன்று தூக்கிலிடப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக  கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவா் மருத்துவப் பரிசோதனைகளை  மேற்கொள்ள மறுத்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன்  தொடா்பு இருப்பதும் அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாகவும்  அவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018 இல்  தீா்ப்பளித்தது.

இந்த இலையில் தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை 26.04.2023 அன்று நிறைவேற்றப்படவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர்  அவரது குடும்பத்தாரிற்கு  அரசு தரப்பில் கடிதம் அனுப்பினர்.

இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்,  தங்கராஜுசுப்பையாவிற்கு  இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக  சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு கட்டாய மரண தண்டனையே விதிக்கப்படுகின்றது.  இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு- சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர்samugammedia சிங்கப்பூரில் போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு  வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை இறுதியாக நிறைவேற்றப்பட்டு 6 மாத காலங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தங்கராஜூ சுப்பையா என்பவரே இன்று தூக்கிலிடப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக  கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவா் மருத்துவப் பரிசோதனைகளை  மேற்கொள்ள மறுத்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன்  தொடா்பு இருப்பதும் அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாகவும்  அவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018 இல்  தீா்ப்பளித்தது. இந்த இலையில் தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை 26.04.2023 அன்று நிறைவேற்றப்படவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர்  அவரது குடும்பத்தாரிற்கு  அரசு தரப்பில் கடிதம் அனுப்பினர். இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்,  தங்கராஜுசுப்பையாவிற்கு  இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக  சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு கட்டாய மரண தண்டனையே விதிக்கப்படுகின்றது.  இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement