• Nov 19 2024

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்டி முடிவு - இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்..!samugammedia

Tharun / Feb 23rd 2024, 7:28 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளை  வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் இன்று காலை கிளிநொச்சியில் கூடி முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திலேயே வழக்கை எதிர்கொண்டு நீதிமன்ற கட்டளைப்படி விடயங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

வழக்காளிகளுடன் பேசுவதற்கு இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் ஆகியோர் கொண்ட குழு இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை அவர்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டன என அறியவந்தது.

வழக்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சமரசமாக தீர்க்கும் கருத்தியல் இன்றைய கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. வழக்காளிகள் நிபந்தனையின்றி வழக்குகளை  வாங்காவிட்டால் சட்டப் போராட்டம் நடத்தத் தயார் என்று உறுதியாக பேசப்பட்டது என தெரியவந்துள்ளது.

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்டி முடிவு - இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.samugammedia இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளை  வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் இன்று காலை கிளிநொச்சியில் கூடி முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.இந்தக் கூட்டத்திலேயே வழக்கை எதிர்கொண்டு நீதிமன்ற கட்டளைப்படி விடயங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.வழக்காளிகளுடன் பேசுவதற்கு இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் ஆகியோர் கொண்ட குழு இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை அவர்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டன என அறியவந்தது.வழக்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சமரசமாக தீர்க்கும் கருத்தியல் இன்றைய கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. வழக்காளிகள் நிபந்தனையின்றி வழக்குகளை  வாங்காவிட்டால் சட்டப் போராட்டம் நடத்தத் தயார் என்று உறுதியாக பேசப்பட்டது என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement