• Apr 23 2026

விறுவிறுப்பாகும் வாக்களிப்பு; தமிழகம் முழுவதும் பரபரப்பு- திரண்டு செல்லும் மக்கள்!

shanu / Apr 23rd 2026, 12:00 pm
image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் , திரைப்பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் திரண்டு வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர். 


நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.


நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.


இதேவேளை,  நடிகர் அஜித் குமார் காலை 7 மணிக்கு முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பிரபல நடடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந், இயக்குநர் மணிரட்ணம், நடிகர் விக்ரம், நடிகர் சுந்தர் .சி, நடிகை குஷ்பு, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா என ஒட்டுமொத்த திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். 


கடந்த தேர்தல்களை விட இம்முறை தேர்தல் உச்சக்கட்டத்தில் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் பிரபல நடிகர் விஜய், அரசியலில் முதல்முறை கால்பதித்துள்ளார். முதல்முறையாக கால்பதித்திருந்தாலும் அவருக்கு அவரது இரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர். 

விறுவிறுப்பாகும் வாக்களிப்பு; தமிழகம் முழுவதும் பரபரப்பு- திரண்டு செல்லும் மக்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் , திரைப்பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் திரண்டு வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.இதேவேளை,  நடிகர் அஜித் குமார் காலை 7 மணிக்கு முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பிரபல நடடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந், இயக்குநர் மணிரட்ணம், நடிகர் விக்ரம், நடிகர் சுந்தர் .சி, நடிகை குஷ்பு, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா என ஒட்டுமொத்த திரை நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தல்களை விட இம்முறை தேர்தல் உச்சக்கட்டத்தில் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் பிரபல நடிகர் விஜய், அரசியலில் முதல்முறை கால்பதித்துள்ளார். முதல்முறையாக கால்பதித்திருந்தாலும் அவருக்கு அவரது இரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement