• Apr 16 2025

தமிழரசுக் கட்சி எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும்; சிறிநாத் எம்.பி உறுதி..!

Sharmi / Feb 25th 2025, 8:56 am
image

 தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும் அரசாங்கம் கூட எதிர்காலத்தில் மாறலாம் எனவும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியானது எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈரளகுளம் ,மற்றும் வட்டவான் போன்ற பகுதிகளில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எந்த நல்ல அபிப்பிராயங்களும் இல்லை என்பது உண்மை. 

தேசிய மக்கள் சக்தியில் தலைமைப் பீடத்தின் கதையை கேட்டே அவர்கள் செயற்பட வேண்டும் என்று ஓர் நிலைப்பாடு உள்ளது.

ஆனால் தமிழ் மக்களின் குரலாய் , தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது போராட்டங்கள் மூலமும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க எம்மாலே முடியும்.

சட்டவிரோத மணல் அகழ்வை தடைசெய்துள்ளோம் ஆனால் கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்களே பெரும்பாலான ஊழல்களை செய்திருந்தார்கள் தற்போது மக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தல் காலங்களில் நல்ல பாடத்தை புகட்டி உள்ளனர் எனவும் கருத்து தெரிவித்தார்.


தமிழரசுக் கட்சி எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும்; சிறிநாத் எம்.பி உறுதி.  தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும் அரசாங்கம் கூட எதிர்காலத்தில் மாறலாம் எனவும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியானது எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈரளகுளம் ,மற்றும் வட்டவான் போன்ற பகுதிகளில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எந்த நல்ல அபிப்பிராயங்களும் இல்லை என்பது உண்மை. தேசிய மக்கள் சக்தியில் தலைமைப் பீடத்தின் கதையை கேட்டே அவர்கள் செயற்பட வேண்டும் என்று ஓர் நிலைப்பாடு உள்ளது.ஆனால் தமிழ் மக்களின் குரலாய் , தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது போராட்டங்கள் மூலமும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க எம்மாலே முடியும்.சட்டவிரோத மணல் அகழ்வை தடைசெய்துள்ளோம் ஆனால் கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்களே பெரும்பாலான ஊழல்களை செய்திருந்தார்கள் தற்போது மக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தல் காலங்களில் நல்ல பாடத்தை புகட்டி உள்ளனர் எனவும் கருத்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement