• Jan 10 2025

கடற்கோளில் பலியான உறவுகளுக்குப் பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி!

Chithra / Dec 27th 2024, 3:28 pm
image


இலங்கையைக் கடற்கோள் தாக்கி 20ஆவது ஆண்டு நிறைவில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. 

இந்த அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை பூநகரியில் வெட்டுக்காடு பாத்திமா தேவாலய முன்றலில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வெட்டுக்காடு கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

முதலில் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தால் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகளைத் தணிக்க முடியும் என்ற பொருளில் பொ. ஐங்கரநேசனின் சூழல் விழிப்புணர்வு உரை இடம்பெற்றது.

பங்கேற்ற அனைவரும் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடமேற்குக் கரையை அண்டிய இந்து சமுத்திரத்தின் அடித்தளத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்த பாரிய நில நடுக்கமே கடற்கோளைப் பிரசவித்திருந்தது.

 இதன்போது இராட்சத வேகத்துடன் மேலெழுந்து வந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் இரண்டரை இலட்சத்து அறுபத்து ஐயாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்தி ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினார்கள்.

ஆழிப்பேரலைகளால் அள்ளுப்பட்டு ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தார்கள். இவர்களை நினைவுகூர்ந்து கடற்கோள் நினைவு நாளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக உணர்வு பூர்வமாகக் கடைப்பிடித்து வருகிறது.

கடற்கோள் தாக்கிய நாளை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினம் என்ற பெயரில் கடைப்பிடித்து வருகிறது. இப்பெயரின் பொருத்தமற்ற தன்மை கருதி வடக்கு மாகாண சபை இந்நாளை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


கடற்கோளில் பலியான உறவுகளுக்குப் பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி இலங்கையைக் கடற்கோள் தாக்கி 20ஆவது ஆண்டு நிறைவில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை பூநகரியில் வெட்டுக்காடு பாத்திமா தேவாலய முன்றலில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.இதில் வெட்டுக்காடு கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.முதலில் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தால் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகளைத் தணிக்க முடியும் என்ற பொருளில் பொ. ஐங்கரநேசனின் சூழல் விழிப்புணர்வு உரை இடம்பெற்றது.பங்கேற்ற அனைவரும் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடமேற்குக் கரையை அண்டிய இந்து சமுத்திரத்தின் அடித்தளத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்த பாரிய நில நடுக்கமே கடற்கோளைப் பிரசவித்திருந்தது. இதன்போது இராட்சத வேகத்துடன் மேலெழுந்து வந்த ஆழிப்பேரலைகளில் சிக்கி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் இரண்டரை இலட்சத்து அறுபத்து ஐயாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்தி ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினார்கள்.ஆழிப்பேரலைகளால் அள்ளுப்பட்டு ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தார்கள். இவர்களை நினைவுகூர்ந்து கடற்கோள் நினைவு நாளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக உணர்வு பூர்வமாகக் கடைப்பிடித்து வருகிறது.கடற்கோள் தாக்கிய நாளை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினம் என்ற பெயரில் கடைப்பிடித்து வருகிறது. இப்பெயரின் பொருத்தமற்ற தன்மை கருதி வடக்கு மாகாண சபை இந்நாளை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement