• Jan 10 2025

தமிழ்த் தேசியக் கட்சிகள் 25 ஆம் திகதி பேச்சு நடத்தும் - கஜேந்திரகுமார்

Tharmini / Jan 9th 2025, 12:35 pm
image

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (07) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் நடந்த சந்திப்பில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் 25 ஆம் திகதி பேச்சு நடத்தும் - கஜேந்திரகுமார் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம் (07) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் நடந்த சந்திப்பில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement