• Apr 19 2025

வுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Thansita / Apr 13th 2025, 5:54 pm
image

வவுனியாவில் பொக்கு தமிழ் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா நகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற பின் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13.04) வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது தமிழ் மக்கள் பேரவையாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடசியின் செயலாளரும், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரான செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா, ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி நாவலன் மற்றும் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

வுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியாவில் பொக்கு தமிழ் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.வவுனியா நகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற பின் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13.04) வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது தமிழ் மக்கள் பேரவையாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடசியின் செயலாளரும், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரான செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா, ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி நாவலன் மற்றும் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement