• Nov 25 2024

ஈ.பி.டி.பியின் கொள்கை வழியில் பயணிக்கும் தமிழ் கட்சிகள்...!ஸ்ரீ ரங்கேஸ்வரன் பெருமிதம்...! samugammedia

Sharmi / Jan 24th 2024, 7:21 pm
image

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய  கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்ற  அரசியல்  தீர்வை அல்லது அரசியல் வழிகாட்டலை இன்று தமிழ்  கட்சிகள்  ஏற்று  அல்லது பின்பற்றி வருகிறது என்பதை நாங்கள் பெருமையாக எடுத்துக் கொண்டாலும் அல்லது. தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கான தீர்வை நோக்கி அவர்கள் வலுச்  சேர்க்க வேண்டும்.


எங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் அல்லது எங்களுடைய கருத்துக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததையிட்டு நாங்கள் இந்த இடத்திலே பெருமை அடைகின்றோம்.


அதே நேரம் நாங்கள் இன்னும் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருக்கிறது.


சமீபத்திலே  பாராளுமன்றத்திலே நீதி அமைச்சரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது மலையக  மக்களுடைய வாக்குரிமை தன்னுடைய பேரனார் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை என்ற செய்தியை அவர்கள். ஊடகங்களிலே சொல்லி இருக்கின்றார்கள்.


1949 ஆம் ஆண்டு ஜீ.ஜீ  பொன்னம்பலம் அவர்கள்  மலையக  மக்களுடைய வாக்குரிமையையும் அவர்களுடைய பிரஜா உரிமைகளையும் பறிப்பதற்க்காக  அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்கின்ற முழுமையான  ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. 


தேவை ஏற்படுகின்ற போது அந்த ஆதாரங்களுடன் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.


ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களுடைய,  மலையக மக்களுடைய வாக்குரிமையை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியோ  அல்லது ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களோ எந்த விதத்திலும்  பறிக்கவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக நடக்கவில்லை  என்கின்ற பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்.


 உண்மையிலேயே அவர்கள் அந்த  மக்கள்,  இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக. இந்த நாட்டினுடைய. வருவாய் ஈட்டி கொடுக்கின்ற மக்களுடைய.  வாக்குரிமையையும்,  பிரஜா உரிமையையும் தங்களுடைய சுய அரசியல் இலாபத்திற்க்காக அமைச்சு பதவியை பெறுவதற்க்காகவும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்கின்ற ஆதாரங்களும் எங்களிடம்  இருக்கின்றது என்பதனையும் இந்த இடத்தை நாங்கள் தெரியப்படுகின்றோம்.


 தேவைப்படுகின்ற போது. ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றோம். அதேபோன்று இன்னும் ஒரு செய்தியை நாங்கள் சொல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இணையவழி நிகழ்நிலை சட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு தரப்புகள் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.


ஆனால் வழியிலே செல்கின்றவனுக்கு மடியிலே கனம் இருந்தால் தான் பயம் என்று ஒரு பழமொழி ஒன்று சொல்லுவார்கள். உண்மையிலே இன்று நாங்கள் பார்க்கின்ற போது அது கருத்து சுதந்திரத்தை  தடுக்குமா என்கின்ற. கருத்துக்கள் எல்லாம் கூறப்படுகின்றது.


ஆகவே உண்மையான செய்திகளை வெளியிட்டி வருகின்ற எவரும்  இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய தேவை ஏதும் இருக்கும் என்று. நாங்கள் கருதவில்லை.


மாறாக தவறான கருத்துக்களையோ, அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளையோ அல்லது. உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தான் இதில்  அச்சமடைய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.


இவ்வாறான இணைய தளங்களில் வெளியாகிய  செய்திகளை பார்த்து அவமானம் அடைந்துள்ளனர். 


ஆகவே ஒரு கட்டுப்பாடுகளோ நெறிப்பாடுகளோ இல்லை. அதே நேரம் மக்களுடைய கருத்து சுதந்திரம் தடுக்கப்படுமாக இருந்தால் ஈழமக்கள் ஜன நாயக கட்சி இவ்விடயமாக மீள் பரிசீலனை செய்யும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.


ஈ.பி.டி.பியின் கொள்கை வழியில் பயணிக்கும் தமிழ் கட்சிகள்.ஸ்ரீ ரங்கேஸ்வரன் பெருமிதம். samugammedia ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய  கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்ற  அரசியல்  தீர்வை அல்லது அரசியல் வழிகாட்டலை இன்று தமிழ்  கட்சிகள்  ஏற்று  அல்லது பின்பற்றி வருகிறது என்பதை நாங்கள் பெருமையாக எடுத்துக் கொண்டாலும் அல்லது. தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கான தீர்வை நோக்கி அவர்கள் வலுச்  சேர்க்க வேண்டும். எங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் அல்லது எங்களுடைய கருத்துக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததையிட்டு நாங்கள் இந்த இடத்திலே பெருமை அடைகின்றோம்.அதே நேரம் நாங்கள் இன்னும் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருக்கிறது.சமீபத்திலே  பாராளுமன்றத்திலே நீதி அமைச்சரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது மலையக  மக்களுடைய வாக்குரிமை தன்னுடைய பேரனார் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை என்ற செய்தியை அவர்கள். ஊடகங்களிலே சொல்லி இருக்கின்றார்கள்.1949 ஆம் ஆண்டு ஜீ.ஜீ  பொன்னம்பலம் அவர்கள்  மலையக  மக்களுடைய வாக்குரிமையையும் அவர்களுடைய பிரஜா உரிமைகளையும் பறிப்பதற்க்காக  அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்கின்ற முழுமையான  ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. தேவை ஏற்படுகின்ற போது அந்த ஆதாரங்களுடன் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களுடைய,  மலையக மக்களுடைய வாக்குரிமையை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியோ  அல்லது ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களோ எந்த விதத்திலும்  பறிக்கவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக நடக்கவில்லை  என்கின்ற பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கின்றார். உண்மையிலேயே அவர்கள் அந்த  மக்கள்,  இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக. இந்த நாட்டினுடைய. வருவாய் ஈட்டி கொடுக்கின்ற மக்களுடைய.  வாக்குரிமையையும்,  பிரஜா உரிமையையும் தங்களுடைய சுய அரசியல் இலாபத்திற்க்காக அமைச்சு பதவியை பெறுவதற்க்காகவும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்கின்ற ஆதாரங்களும் எங்களிடம்  இருக்கின்றது என்பதனையும் இந்த இடத்தை நாங்கள் தெரியப்படுகின்றோம். தேவைப்படுகின்ற போது. ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றோம். அதேபோன்று இன்னும் ஒரு செய்தியை நாங்கள் சொல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம்.இணையவழி நிகழ்நிலை சட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு தரப்புகள் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.ஆனால் வழியிலே செல்கின்றவனுக்கு மடியிலே கனம் இருந்தால் தான் பயம் என்று ஒரு பழமொழி ஒன்று சொல்லுவார்கள். உண்மையிலே இன்று நாங்கள் பார்க்கின்ற போது அது கருத்து சுதந்திரத்தை  தடுக்குமா என்கின்ற. கருத்துக்கள் எல்லாம் கூறப்படுகின்றது.ஆகவே உண்மையான செய்திகளை வெளியிட்டி வருகின்ற எவரும்  இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய தேவை ஏதும் இருக்கும் என்று. நாங்கள் கருதவில்லை.மாறாக தவறான கருத்துக்களையோ, அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளையோ அல்லது. உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தான் இதில்  அச்சமடைய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.இவ்வாறான இணைய தளங்களில் வெளியாகிய  செய்திகளை பார்த்து அவமானம் அடைந்துள்ளனர். ஆகவே ஒரு கட்டுப்பாடுகளோ நெறிப்பாடுகளோ இல்லை. அதே நேரம் மக்களுடைய கருத்து சுதந்திரம் தடுக்கப்படுமாக இருந்தால் ஈழமக்கள் ஜன நாயக கட்சி இவ்விடயமாக மீள் பரிசீலனை செய்யும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement