இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு பொலிஸார் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர்,வாங்குவோரை பொலிஸாருக்கு தெரியும்.
பாவனையாளரை பொலிஸாருக்கு தெரியும் .ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
வடக்கில் போதை வியாபாரம் மூலம் அழிக்கப்படும் தமிழ் இளைஞர்கள். சபையில் வினோ எம்.பி ஆதங்கம்.samugammedia வடக்கில் தமிழ் இளைஞர்கள் போதைப் பொருள் ஊடாக அழிக்கப்படுகின்றார்கள் என வினோ நோகராதலிங்கம் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வடமாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானதுஇளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு பொலிஸார் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர்,வாங்குவோரை பொலிஸாருக்கு தெரியும்.பாவனையாளரை பொலிஸாருக்கு தெரியும் .ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.