• Nov 06 2024

வரி இலக்கம் கட்டாயம்! புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு விசேட அறிவிப்பு

Chithra / Sep 8th 2024, 7:23 am
image

Advertisement

 

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற வழக்குகளில் வரி இலக்கத்தை பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி இலக்கம் கட்டாயம் புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு விசேட அறிவிப்பு  புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற வழக்குகளில் வரி இலக்கத்தை பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement