• Sep 17 2024

147 ஆண்டுக் கால சாதனையை முறியடிப்பு - இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் அசத்தல்!

Tamil nila / Sep 8th 2024, 7:38 am
image

Advertisement

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஒல்லி போப் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார். 

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, அந்நாட்டுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது 

 இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது. 

 இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

 இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை விளாசிய ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

 இது 147 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனை ஆகும்.

 இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்ற ஏழாவது சதம் ஆகும்.  இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே பெற்றுள்ளார்.

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.

147 ஆண்டுக் கால சாதனையை முறியடிப்பு - இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் அசத்தல் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஒல்லி போப் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, அந்நாட்டுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது  இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.  இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை விளாசிய ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது 147 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனை ஆகும். இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்ற ஏழாவது சதம் ஆகும்.  இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே பெற்றுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement