• Sep 20 2024

வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை!

Tamil nila / Feb 9th 2023, 1:12 pm
image

Advertisement

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியை இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.


கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்வில் வசித்துவருவதாக கூறப்படுகின்றது.


ஆசிரியர் தனிமையில் இருந்து வந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் மண்டபத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார்.



இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் , தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.  


வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியை இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்வில் வசித்துவருவதாக கூறப்படுகின்றது.ஆசிரியர் தனிமையில் இருந்து வந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் மண்டபத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் , தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement