• Nov 25 2024

நீராடச் சென்ற இளம் தாய் சடலமாக மீட்பு - தலைமறைவான கணவன்! மரணத்தில் சந்தேகம்

Chithra / May 20th 2024, 1:51 pm
image

 

பதுளை - லுணுகல பகுதியில் நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் கும்புக்கன் ஓயாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லுனுகல, ஜனதபுர, துபாஹிட்டியவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்ணசூரிய சுமித்ரா தமயந்தி   என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் உள்ள கும்புக்கன் ஓயாவில் தாய் நீராடச் சென்றதாகவும், இதன்போது அவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவரது முகம், தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல பற்கள் உடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெண்ணின்   மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரும் அவரது கணவரும் நீண்ட காலமாக முரண்பாட்டில் ஈடுபட்டிருந்துள்ளதுடன் உயிரிழந்த பெண் இது தொடர்பில் பலமுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீராடச் சென்ற இளம் தாய் சடலமாக மீட்பு - தலைமறைவான கணவன் மரணத்தில் சந்தேகம்  பதுளை - லுணுகல பகுதியில் நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் கும்புக்கன் ஓயாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.லுனுகல, ஜனதபுர, துபாஹிட்டியவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்ணசூரிய சுமித்ரா தமயந்தி   என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வீட்டிற்கு அருகில் உள்ள கும்புக்கன் ஓயாவில் தாய் நீராடச் சென்றதாகவும், இதன்போது அவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் அவரது முகம், தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல பற்கள் உடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் பெண்ணின்   மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.உயிரிழந்தவரும் அவரது கணவரும் நீண்ட காலமாக முரண்பாட்டில் ஈடுபட்டிருந்துள்ளதுடன் உயிரிழந்த பெண் இது தொடர்பில் பலமுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement