• Jan 08 2025

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

Chithra / Jan 2nd 2025, 3:38 pm
image

 

குருநாகல் - நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தில் உள்ள வயிலில் நேற்று புதன்கிழமை (01) மாலை மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார். 

உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால், இளைஞனின் உறவினர்கள் இது தொடர்பில் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து காணாமல் போன இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது வயலிலிருந்து இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு  குருநாகல் - நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தில் உள்ள வயிலில் நேற்று புதன்கிழமை (01) மாலை மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார். உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.இதனால், இளைஞனின் உறவினர்கள் இது தொடர்பில் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து காணாமல் போன இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது வயலிலிருந்து இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement