• Feb 20 2025

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை - சில பகுதிகளில் மழை

Chithra / Feb 18th 2025, 7:36 am
image


நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

வாகனத்திற்குள் சிறார்களைத் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியாற்றுபவர்கள் இயன்றளவு நீரைப் பருக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பொதுவெளியில் கடுமையான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வெள்ளை அல்லது இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது . 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  

வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகாலையில் குளிரான வானிலை நிலவக்கூடும். 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை நேரத்தில் பனிமூட்டமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை - சில பகுதிகளில் மழை நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் சிறார்களைத் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியாற்றுபவர்கள் இயன்றளவு நீரைப் பருக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுவெளியில் கடுமையான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வெள்ளை அல்லது இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது . காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகாலையில் குளிரான வானிலை நிலவக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை நேரத்தில் பனிமூட்டமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement