• Nov 24 2024

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மீண்டும் பதற்றம்..! – களத்தில் இராணுவத்தினர்..!

Chithra / Jan 13th 2024, 10:53 am
image

 

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கு இடையே மீண்டும் மோதல் இடம்பெற்று வருவதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் 26 பேர் காயமடைந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,

சம்பவம் தொடர்பில் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் 25 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள மற்மொரு குழுவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உணவு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மீண்டும் பதற்றம். – களத்தில் இராணுவத்தினர்.  கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கு இடையே மீண்டும் மோதல் இடம்பெற்று வருவதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் 26 பேர் காயமடைந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,சம்பவம் தொடர்பில் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் மேலும் 25 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள மற்மொரு குழுவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உணவு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement