• May 20 2024

கொழும்பில் பதற்றம்...! காலிமுகத்திடல் நோக்கி செல்ல முற்பட்ட போராட்டக்காரர்களை வழிமறித்த பொலிஸார்! பெண் கைது !samugammedia

Chithra / May 9th 2023, 1:54 pm
image

Advertisement

கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி சற்றுமுன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மாளிகாவத்த பகுதியிலிருந்து காலிமுகத்திடல் பகுதிக்கு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை வழிமறித்த பொலிஸார் பேரணியை முன்னெடுக்க தடை விதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் பதிவாகியுள்ளதுடன், குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து கொழும்பில் பல பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


கொழும்பில் பதற்றம். காலிமுகத்திடல் நோக்கி செல்ல முற்பட்ட போராட்டக்காரர்களை வழிமறித்த பொலிஸார் பெண் கைது samugammedia கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி சற்றுமுன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மாளிகாவத்த பகுதியிலிருந்து காலிமுகத்திடல் பகுதிக்கு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை வழிமறித்த பொலிஸார் பேரணியை முன்னெடுக்க தடை விதித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் பதிவாகியுள்ளதுடன், குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து கொழும்பில் பல பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement