• Jul 08 2026

மட்டக்களப்பு நகரில் அதிகாலை பயங்கர தீ! வர்த்தக நிலையங்கள் சேதம்

Chithra / Jul 7th 2026, 9:44 am
image


மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஐந்து கடைகள் தீக்கிரையாகி கடுமையான சேதமடைந்துள்ளன.


இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ, ஒன்றுக்கொன்று அண்மையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து வர்த்தக நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.


தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்துகள் பதிவாகி வருவதால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




மட்டக்களப்பு நகரில் அதிகாலை பயங்கர தீ வர்த்தக நிலையங்கள் சேதம் மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஐந்து கடைகள் தீக்கிரையாகி கடுமையான சேதமடைந்துள்ளன.இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ, ஒன்றுக்கொன்று அண்மையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து வர்த்தக நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்துகள் பதிவாகி வருவதால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement