• Dec 14 2024

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு!!

Chithra / May 22nd 2024, 2:37 pm
image


யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ். தொல்புரம் மத்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் பயங்கரம் இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் யாழ். தொல்புரம் மத்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது.வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement