• Nov 28 2024

தைப்பொங்கல் பண்டிகை 2024: பொங்கல் திருநாள் தேதி, வரலாறு மற்றும் மகத்துவம்..!!

Tamil nila / Jan 13th 2024, 10:48 pm
image

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.


 பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்



பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறோம்?  

உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.

குறிப்பாக கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

இரவு நேரங்களில் ஆடல் பாடல் என ஊரே கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார்கள்.  

பொங்கல் வகைகள்

தமிழர்களின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை:

1.போகி பொங்கல்  

2.தைப்பொங்கல்

3.மாட்டுப்பொங்கல்

4.காணும் பொங்கல்

1.போகி பொங்கல் 

நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ம் தேதி போகி கொண்டாடப்படுகிறது.    

 2.தைப்பொங்கல்

புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு படைப்பர்.தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழா.ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

3.மாட்டுப்பொங்கல்.  

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர் விளையாட்டாக நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

4.காணும் பொங்கல்

நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும்.ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 


தைப் பொங்கல் பண்டிகை என்பது, நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும். வாழ்வின் ஆதாரமான விவசாயத்துக்கு எவையெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றுக்கும் நன்றி கூறி வணங்குவது தான் இதன் சாராம்சம்.

இயற்கையையே தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் பாரம்பரியம் தற்போது 2024 பொங்கல் பண்டிகை வரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு ஆதாரமான சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரதேவன் மற்றும் விவசாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகள் ஆகிய அனைத்திற்குமே நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை, தைத் திருநாள் கொண்டிருக்கும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம்

இதே போல ஒரு பக்கம் வாழ்க்கை முறையோடு இணைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தைத்திருநாள் என்பது ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.

தேவர்களின் இரவு காலமான தட்சிணாயன காலம் மார்கழி மாத இறுதி நாளோடு முடிகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வார். சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் அன்றுதான் தை 1, பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

இது தான் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், தென் மாநிலங்களில் ஒரு சில இடங்களில் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி என்பது தேவர்களின் பகல் காலத் தொடக்கமான உத்திராயண புண்ணிய காலத்தை குறிக்கிறது.

இத்தனை சிறப்பு மிக்க பொங்கல் திருநாள் அன்று அனைவரும் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடி மகிழ்வோம்.



தைப்பொங்கல் பண்டிகை 2024: பொங்கல் திருநாள் தேதி, வரலாறு மற்றும் மகத்துவம். பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறோம்  உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.குறிப்பாக கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.இரவு நேரங்களில் ஆடல் பாடல் என ஊரே கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார்கள்.  பொங்கல் வகைகள்தமிழர்களின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை:1.போகி பொங்கல்  2.தைப்பொங்கல்3.மாட்டுப்பொங்கல்4.காணும் பொங்கல்1.போகி பொங்கல் நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ம் தேதி போகி கொண்டாடப்படுகிறது.     2.தைப்பொங்கல்புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு படைப்பர்.தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழா.ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  3.மாட்டுப்பொங்கல்.  மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர் விளையாட்டாக நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  4.காணும் பொங்கல்நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும்.ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் பண்டிகை என்பது, நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும். வாழ்வின் ஆதாரமான விவசாயத்துக்கு எவையெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றுக்கும் நன்றி கூறி வணங்குவது தான் இதன் சாராம்சம்.இயற்கையையே தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் பாரம்பரியம் தற்போது 2024 பொங்கல் பண்டிகை வரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு ஆதாரமான சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரதேவன் மற்றும் விவசாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகள் ஆகிய அனைத்திற்குமே நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.பொங்கல் பண்டிகை, தைத் திருநாள் கொண்டிருக்கும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம்இதே போல ஒரு பக்கம் வாழ்க்கை முறையோடு இணைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தைத்திருநாள் என்பது ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.தேவர்களின் இரவு காலமான தட்சிணாயன காலம் மார்கழி மாத இறுதி நாளோடு முடிகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வார். சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் அன்றுதான் தை 1, பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இது தான் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், தென் மாநிலங்களில் ஒரு சில இடங்களில் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி என்பது தேவர்களின் பகல் காலத் தொடக்கமான உத்திராயண புண்ணிய காலத்தை குறிக்கிறது.இத்தனை சிறப்பு மிக்க பொங்கல் திருநாள் அன்று அனைவரும் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடி மகிழ்வோம்.

Advertisement

Advertisement

Advertisement