• May 09 2024

'என் பெற்றோர்க்கு நன்றி ''- ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி!

Tamil nila / Jan 8th 2023, 9:03 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.


இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஆல்டைம் ஃபேவரைட் ஆக உள்ளது.

தொடர்ந்து,கமல், விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணி  நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


ரசிகர்கள் இவரை, மெலடி கிங் என்று அழைத்து வருகின்றனர்.


இந்த  நிலையில் சமீபத்தில் இவர் லெஜண்ட் என்ற படத்திற்கு  இசையமைத்திருந்தார்.


அடுத்து புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


இன்று 48 வது பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.



இதையொட்டி, தன் டிவிட்டர் பக்கத்தில், ஹாரீஸ் ஜெயராஜ் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார். அதில், ''நான் இந்திய நிலையில் இருக்க காரணமாயிருக்கும் என் பெற்றோர்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அப்பா எனக்கு இசை கற்பித்தார். என் அம்மா எனக்கு அன்பபையும், அடக்கத்தையும் கற்றுக் கொடுத்தார், இப்புகைப்படம் என் 2 வயதில் வீட்டிற்கு முன்பு எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.


'என் பெற்றோர்க்கு நன்றி ''- ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஆல்டைம் ஃபேவரைட் ஆக உள்ளது.தொடர்ந்து,கமல், விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணி  நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.ரசிகர்கள் இவரை, மெலடி கிங் என்று அழைத்து வருகின்றனர்.இந்த  நிலையில் சமீபத்தில் இவர் லெஜண்ட் என்ற படத்திற்கு  இசையமைத்திருந்தார்.அடுத்து புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இன்று 48 வது பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.இதையொட்டி, தன் டிவிட்டர் பக்கத்தில், ஹாரீஸ் ஜெயராஜ் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார். அதில், ''நான் இந்திய நிலையில் இருக்க காரணமாயிருக்கும் என் பெற்றோர்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அப்பா எனக்கு இசை கற்பித்தார். என் அம்மா எனக்கு அன்பபையும், அடக்கத்தையும் கற்றுக் கொடுத்தார், இப்புகைப்படம் என் 2 வயதில் வீட்டிற்கு முன்பு எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement