2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2027 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.