• Nov 28 2024

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா..!

Sharmi / Oct 5th 2024, 12:13 pm
image

தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பு  பேருந்து நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது.

மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமான நிகழ்வில்,  தாய்தமிழ்  பேரவையில் பணியாற்றி மக்களுக்காக  சமூக தொண்டாற்றி உயிர்த்தியாகம் செய்து மரணித்த 12 உறவுகளின் உருவருட படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று ,வரவேற்புரை,  நடனம், சிறப்புரைகள், கௌரவிப்பு நிகழ்வுகள்  இடம்பெற்றிருந்தது.

சமூக தொண்டாற்றி வரும்  குறித்த  தாய் தமிழ் பேரவை அமைப்பானது  பெண்களுக்கான சேமிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு, நினைேவேந்தல் நிகழ்வுகள்,  வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்கலும் புனரமைப்பும், இலவச கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி வழங்கல், விளையாட்டு நிகழ்வுகளை  ஊக்குவித்தல், வாழ்வாதார உதவி ,இலவச தையல் பயிற்சி , மருத்துவ உதவி, இடர்கால உதவி ,கல்விக்கான உதவி , அமரர் புஸ்பராசா நற்பணிமன்றத்தின் இலவச அமரர் ஊர்தி சேவை, வறியோருக்கான  மரணசடங்கு என பல்வேறுபட்ட அளப்பெரிய பணிகளை ஆற்றிவருகின்றது. 

குறித்த  நிகழ்வில், முல்லை கல்வி வயத்தின் முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் நாகரட்ணம், முல்லை கல்வி வலயத்தின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் பேரின்பநாயகம், புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பரணிதரன் , புதுக்குடியிருப்பு  சிறிசுப்ரமணிய வித்தியாலய முன்னாள் அதிபர் செல்வநாயகம்,தாய் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் சத்தியரூபன், தாய்த்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நவவநீதன், தாய்த் தமிழ் பேரவையின் மகளீர் அணி தலைவி குணசீலா , கவிஞர் யோபுரட்சி ,  சமூக செயற்பாட்டாளர்கள், தாய்த்தமிழ் பேரவையின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.











புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா. தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பு  பேருந்து நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தது.மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமான நிகழ்வில்,  தாய்தமிழ்  பேரவையில் பணியாற்றி மக்களுக்காக  சமூக தொண்டாற்றி உயிர்த்தியாகம் செய்து மரணித்த 12 உறவுகளின் உருவருட படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று ,வரவேற்புரை,  நடனம், சிறப்புரைகள், கௌரவிப்பு நிகழ்வுகள்  இடம்பெற்றிருந்தது.சமூக தொண்டாற்றி வரும்  குறித்த  தாய் தமிழ் பேரவை அமைப்பானது  பெண்களுக்கான சேமிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு, நினைேவேந்தல் நிகழ்வுகள்,  வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்கலும் புனரமைப்பும், இலவச கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி வழங்கல், விளையாட்டு நிகழ்வுகளை  ஊக்குவித்தல், வாழ்வாதார உதவி ,இலவச தையல் பயிற்சி , மருத்துவ உதவி, இடர்கால உதவி ,கல்விக்கான உதவி , அமரர் புஸ்பராசா நற்பணிமன்றத்தின் இலவச அமரர் ஊர்தி சேவை, வறியோருக்கான  மரணசடங்கு என பல்வேறுபட்ட அளப்பெரிய பணிகளை ஆற்றிவருகின்றது. குறித்த  நிகழ்வில், முல்லை கல்வி வயத்தின் முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் நாகரட்ணம், முல்லை கல்வி வலயத்தின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் பேரின்பநாயகம், புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பரணிதரன் , புதுக்குடியிருப்பு  சிறிசுப்ரமணிய வித்தியாலய முன்னாள் அதிபர் செல்வநாயகம்,தாய் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் சத்தியரூபன், தாய்த்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நவவநீதன், தாய்த் தமிழ் பேரவையின் மகளீர் அணி தலைவி குணசீலா , கவிஞர் யோபுரட்சி ,  சமூக செயற்பாட்டாளர்கள், தாய்த்தமிழ் பேரவையின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement