• Jan 23 2025

96 ஆவது ஓஸ்கார் விழா இரத்து செய்யப்படலாம்

Tharmini / Jan 15th 2025, 12:32 pm
image

உலகில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஓஸ்கார் விழா, இந்த ஆண்டு ஓஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி சன் செய்தித்தாளின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் இரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாம் ஹாங்க்ஸ், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைமையிலான குழு அகாடமி விருது வழங்கும் விழா, இறுதி முடிவை எடுக்க நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

“இந்த நேரத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மனவேதனை மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்பதே விழா ஏற்பாட்டு குழுவின் நோக்கமாகவுள்ளது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட சேதங்களும் வலிகளும் உடனடியாக நீங்காது என்பதே உண்மை. எனினும், தற்போதைய நிலையில், மார்ச் இரண்டாம் திகதி விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், காட்டுத்தீ காரணமாக ஓஸ்கார் பரிந்துரைகளும் தாமதமாகின. 97வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு முதலில் ஜனவரி 17 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.

இப்போது இது ஜனவரி 19 ஆம் திகதி நடைபெறும் என்பதுடன், கூடுதலாக, பரிந்துரைகளுக்கான வாக்களிப்பும் ஜனவரி 14 ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

96 ஆவது ஓஸ்கார் விழா இரத்து செய்யப்படலாம் உலகில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஓஸ்கார் விழா, இந்த ஆண்டு ஓஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.தி சன் செய்தித்தாளின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் இரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டாம் ஹாங்க்ஸ், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைமையிலான குழு அகாடமி விருது வழங்கும் விழா, இறுதி முடிவை எடுக்க நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.“இந்த நேரத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மனவேதனை மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்பதே விழா ஏற்பாட்டு குழுவின் நோக்கமாகவுள்ளது.தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட சேதங்களும் வலிகளும் உடனடியாக நீங்காது என்பதே உண்மை. எனினும், தற்போதைய நிலையில், மார்ச் இரண்டாம் திகதி விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாத தொடக்கத்தில், காட்டுத்தீ காரணமாக ஓஸ்கார் பரிந்துரைகளும் தாமதமாகின. 97வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு முதலில் ஜனவரி 17 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.இப்போது இது ஜனவரி 19 ஆம் திகதி நடைபெறும் என்பதுடன், கூடுதலாக, பரிந்துரைகளுக்கான வாக்களிப்பும் ஜனவரி 14 ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement