புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு பகுதியில் அண்மைக்காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மற்றும் நெத்தலி ஆறு பகுதிகளில் இரவு வேளைகளில் பெறுமதிமிக்க மரங்களை சட்டவிரோதமான முறையில் எந்தவித அனுமதியும் இன்றி வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக விசுவமடு நாச்சிக்குடா பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த 15 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வீட்டு உரிமையாளரான 85 வயதுடைய முதியவர் வைத்திய சிகிச்சைக்காக உறவினர் வீட்டில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான காணியில் காணப்பட்ட பெறுமதி மிக்க முதிரை மரங்களையும் வெட்டியுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் வெட்டப்பட்டு உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது குடியிருப்பு பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்குறித்த சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாதிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் பெறுமதிமிக்க மரங்களை வெட்டி செல்லும் செயற்பாடு கிளிநொச்சியில் அதிகரிப்பு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு பகுதியில் அண்மைக்காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மற்றும் நெத்தலி ஆறு பகுதிகளில் இரவு வேளைகளில் பெறுமதிமிக்க மரங்களை சட்டவிரோதமான முறையில் எந்தவித அனுமதியும் இன்றி வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக விசுவமடு நாச்சிக்குடா பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 15 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று வீட்டு உரிமையாளரான 85 வயதுடைய முதியவர் வைத்திய சிகிச்சைக்காக உறவினர் வீட்டில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான காணியில் காணப்பட்ட பெறுமதி மிக்க முதிரை மரங்களையும் வெட்டியுள்ளனர்.நள்ளிரவு நேரத்தில் வெட்டப்பட்டு உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.புது குடியிருப்பு பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்குறித்த சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாதிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.