• Jan 19 2026

குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம்; அரியாலையில் பரபரப்பு

Chithra / Jan 18th 2026, 8:06 am
image


யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் கூரையில் பரவியதில் வீடொன்று பகுதி அளவில் தீக்கிரையாகியுள்ளது. 


இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது:


அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், நேற்று தங்கள் வீட்டு வளவிற்குள் சேர்ந்திருந்த குப்பைகளைச் சேகரித்து அதற்குத் தீ வைத்துள்ளனர். 


குப்பைகள் எரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.


குப்பையில் பற்றி எரிந்த தீயின் வீச்சு, காற்றின் காரணமாக அருகில் இருந்த வீட்டின் கூரைப்பகுதிக்குத் பரவியுள்ளது. 


இதனால் வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 


இதனை அவதானித்த அயலவர்கள், உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முனைந்தனர்.


அயலவர்களின் துரித மற்றும் சமயோசித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. 


இருப்பினும், இந்த விபத்தில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வீட்டு வளவுகளில் குப்பைகளை எரிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தீயை முழுமையாக அணைக்காமல் அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.


குப்பைக்கு வைத்த தீயால் நேர்ந்த விபரீதம்; அரியாலையில் பரபரப்பு யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் கூரையில் பரவியதில் வீடொன்று பகுதி அளவில் தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது:அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், நேற்று தங்கள் வீட்டு வளவிற்குள் சேர்ந்திருந்த குப்பைகளைச் சேகரித்து அதற்குத் தீ வைத்துள்ளனர். குப்பைகள் எரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.குப்பையில் பற்றி எரிந்த தீயின் வீச்சு, காற்றின் காரணமாக அருகில் இருந்த வீட்டின் கூரைப்பகுதிக்குத் பரவியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த அயலவர்கள், உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முனைந்தனர்.அயலவர்களின் துரித மற்றும் சமயோசித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வீட்டு வளவுகளில் குப்பைகளை எரிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தீயை முழுமையாக அணைக்காமல் அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement