• Jan 19 2026

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

Chithra / Jan 18th 2026, 8:08 am
image

 

முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க இன்று (18) காலமானார்.


ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  


நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 64 ஆவது வயதில் இன்று (18) காலமாகியுள்ளார்.


ஜே.வி.பி.யின் ஆரம்பகால உறுப்பினரான இவர், ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.


இதன்பின்னர், ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து, பாணந்துறை மாநகர சபையின் மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்  முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க இன்று (18) காலமானார்.ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 64 ஆவது வயதில் இன்று (18) காலமாகியுள்ளார்.ஜே.வி.பி.யின் ஆரம்பகால உறுப்பினரான இவர், ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.இதன்பின்னர், ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து, பாணந்துறை மாநகர சபையின் மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement