• May 17 2024

நற்பிரஜையை உருவாக்கும் நோக்கம் - தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு! விரிவுரையாளர் சுட்டிக்காட்டு samugammedia

Chithra / Jun 9th 2023, 11:44 am
image

Advertisement

நற்பிரஜையை உருவாக்கும் நோக்குடன் பாடசாலையே பிரதானமாகக் காணப்படுகின்றது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமயம் சார்ந்து வகுப்பறையில் படங்களை வைத்து வணங்கும் மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் கையில் நூல்கள் கட்டிய மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் இங்கு காணப்படுகின்றார்கள்.

ஆசிரியர்கள் தவறு செய்யும் போது வழங்கப்படும் காத்திரம் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்களை இச் சமூகம் காணும் கண்ணோட்டம் காத்திரமானதும் வெறுப்புணர்வு மிக்கது.

ஆறு திருமுருகனை ஒரு சில தினங்களில் போதைப்பொருள் தடுப்பு  பற்றி பேசுவர் பின்னர் அது பற்றி கவனிப்பதில்லை என  வைத்தியர் சிவதாஸ் விமர்சித்தாலும், அவருக்கு ஆன்மீகம், சமூக சேவைகளுடன் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடு என்பது ஒரு பகுதியாக காணப்படுகின்றது. 

இதனை பிரதானப்படுத்தி தொடர்ந்தும் செயற்பட்டால்  ஏற்கனவே முன்னெடுக்கும் பணிகளில் தளம்பல் ஏற்படுமென வைத்தியரின் கருத்துக்கு பதிலடி வழங்கினார்.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனின் பிரதிநிதியாக கு.பாலசண்முகன் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


நற்பிரஜையை உருவாக்கும் நோக்கம் - தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு விரிவுரையாளர் சுட்டிக்காட்டு samugammedia நற்பிரஜையை உருவாக்கும் நோக்குடன் பாடசாலையே பிரதானமாகக் காணப்படுகின்றது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன்  தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,சமயம் சார்ந்து வகுப்பறையில் படங்களை வைத்து வணங்கும் மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் கையில் நூல்கள் கட்டிய மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் இங்கு காணப்படுகின்றார்கள்.ஆசிரியர்கள் தவறு செய்யும் போது வழங்கப்படும் காத்திரம் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்களை இச் சமூகம் காணும் கண்ணோட்டம் காத்திரமானதும் வெறுப்புணர்வு மிக்கது.ஆறு திருமுருகனை ஒரு சில தினங்களில் போதைப்பொருள் தடுப்பு  பற்றி பேசுவர் பின்னர் அது பற்றி கவனிப்பதில்லை என  வைத்தியர் சிவதாஸ் விமர்சித்தாலும், அவருக்கு ஆன்மீகம், சமூக சேவைகளுடன் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடு என்பது ஒரு பகுதியாக காணப்படுகின்றது. இதனை பிரதானப்படுத்தி தொடர்ந்தும் செயற்பட்டால்  ஏற்கனவே முன்னெடுக்கும் பணிகளில் தளம்பல் ஏற்படுமென வைத்தியரின் கருத்துக்கு பதிலடி வழங்கினார்.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனின் பிரதிநிதியாக கு.பாலசண்முகன் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement