• Apr 11 2025

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்! - நாளை தொடக்கம் அளவீடு..! samugammedia

Tamil nila / Dec 14th 2023, 10:44 pm
image

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் நாளை அளவீடு செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளர் செ.லத்தீபனால் இந்தப் பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.

ஆழ்வான் மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தொடர்ச்சியாக இந்த அளவீடு இடம்பெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் - நாளை தொடக்கம் அளவீடு. samugammedia கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் நாளை அளவீடு செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளர் செ.லத்தீபனால் இந்தப் பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.ஆழ்வான் மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் தொடர்ச்சியாக இந்த அளவீடு இடம்பெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now