• May 17 2024

இலங்கையில் எந்த அரசு ஆட்சியமைத்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் தொடரும் - சீமான் சீற்றம்

Chithra / Jan 21st 2023, 3:13 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர்களின் தேசியத் திருவிழாவான தைப்பொங்கல் விழாவில், தமிழினப் படுகொலைகளுக்கு துணை நின்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய சைவ சமயத் தலைவர் ஐயா வேலன் சுவாமிகளை இலங்கை அரசின் காவல்துறை கைது செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.

அவரது கண்டன அறிக்கையில்,

இலங்கை அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது இராணுவம், காவல்துறையினர் மூலம் அடக்குமுறைகளை ஏவி வழக்கு, கைது, சிறை என்று மிரட்டி அச்சுறுத்துவதும், அதிகாரத்தின் துணை கொண்டு தாக்குதல் தொடுப்பதும், அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதும் என இனவாத இலங்கை அரசால் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன.

ஐயா வேலன் சுவாமிகள் மீதான கைது நடவடிக்கை மூலம் இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், யார் ஆட்சித்தலைவராக வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் ஒருபோதும் நிறுத்தாது தொடரும் என்பதனையும், ஒரே நாட்டிற்குள் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழ்வதென்பது ஒருபோதும் சாத்தியமானதல்ல என்பதையும் உலக நாடுகளும், ஐ.நா அவையும் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்- என்றுள்ளது.


இலங்கையில் எந்த அரசு ஆட்சியமைத்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் தொடரும் - சீமான் சீற்றம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர்களின் தேசியத் திருவிழாவான தைப்பொங்கல் விழாவில், தமிழினப் படுகொலைகளுக்கு துணை நின்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய சைவ சமயத் தலைவர் ஐயா வேலன் சுவாமிகளை இலங்கை அரசின் காவல்துறை கைது செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.அவரது கண்டன அறிக்கையில்,இலங்கை அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது இராணுவம், காவல்துறையினர் மூலம் அடக்குமுறைகளை ஏவி வழக்கு, கைது, சிறை என்று மிரட்டி அச்சுறுத்துவதும், அதிகாரத்தின் துணை கொண்டு தாக்குதல் தொடுப்பதும், அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதும் என இனவாத இலங்கை அரசால் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன.ஐயா வேலன் சுவாமிகள் மீதான கைது நடவடிக்கை மூலம் இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், யார் ஆட்சித்தலைவராக வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் ஒருபோதும் நிறுத்தாது தொடரும் என்பதனையும், ஒரே நாட்டிற்குள் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழ்வதென்பது ஒருபோதும் சாத்தியமானதல்ல என்பதையும் உலக நாடுகளும், ஐ.நா அவையும் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement