• May 17 2024

பெருந்தொட்டத் துறை தொழிலாளர்களை ஏமாற்றுகிறது! வடிவேல் சுரேஷ் கண்டனம்!!

crownson / Dec 1st 2022, 9:28 am
image

Advertisement

கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி' எனப் போராடுகிறது மலையகத் தொழிலாளியின் குரல் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்.

பாராளுமன்றத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்ற  2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலாப நோக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பெருந்தோட்ட துறை குறித்தோ அல்லது அங்கு தொழில் புரிய தொழிலாளர்களை பற்றியோ சிறிதேனும் எண்ணம் பெருந்தோட்ட தொழிற்துறையை நிலையாக பேணும் நோக்கம் தோட்ட கம்பனிகளுக்கு கிடையாது.

ஆகவே பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கத்தினால் கவனம் செலுத்த வேண்டும்.

200 வருடகால வரலாற்று பின்னணியை கொண்டுள்ள மலையக மக்கள் இந்த நாட்டின் மூத்த சமூகமாக இருந்து நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழ்ந்துள்ளார்கள். 

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி   நிலமைக்கு மலையக மக்கள் கடுகளவேனும் காரணமானவர்கள் அல்ல. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பினால் எனது தொப்புள் கொடி உறவுகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் உள்ளன. 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் 22 கம்பனிகளிடம் இந்த பெருந்தோட்டங்களை ஒப்படைத்தது.

1992 ஆம் ஆண்டு தோட்டங்களில் காணப்பட்ட. நிலவளம் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பன கணிசமான அளவை குறைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பெருந்தோட்ட கம்பனிகளில்  சுமார்  9 ஆயிரம் காணிகள் காடாக்கப்பட்டுள்ளன.

22 கம்பனிகள் என்பது உண்மையல்ல வெறும் கண்துடைப்பே 4 கம்பளிகள் தான் பெருந்தோட்டங்களில் நிர்வாகிக்கின்றது.  அரசாங்கம் கம்பெனிகளிடம் பெருந்தோட்ட நிர்வாகங்களை கையளிக்கும் போது 12 இலட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்தார்ககுறித்தோம்.

ஆனால் தற்போது பெருந்தோட்டங்களில் 1 இலட்சத்து 43 ஆயிரத்து பேர் மாத்திரம் தான் தொழில் புரிகிறார்கள் . மலையக பெருந்தோட்ட காணிகள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்பட்டு, காணிகள் சட்ட விரோதமான முறையில் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.

பெருந்தொட்ட மலையக மக்களின் காணி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை ஆகியன  அவர்களுக்கு சென்றடைய வேண்டும்.

நாட்டினுடைய தொழிற்சட்டத்தில் காணப்படும் சலுகைகளும், உரிமைகளும் பெருந்தொட்ட மலையக மக்களையும் சென்றடைய வேண்டுமென வலியுறுத்தினார்.

பெருந்தொட்டத் துறை தொழிலாளர்களை ஏமாற்றுகிறது வடிவேல் சுரேஷ் கண்டனம் கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி' எனப் போராடுகிறது மலையகத் தொழிலாளியின் குரல் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்.பாராளுமன்றத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்ற  2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலாப நோக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பெருந்தோட்ட துறை குறித்தோ அல்லது அங்கு தொழில் புரிய தொழிலாளர்களை பற்றியோ சிறிதேனும் எண்ணம் பெருந்தோட்ட தொழிற்துறையை நிலையாக பேணும் நோக்கம் தோட்ட கம்பனிகளுக்கு கிடையாது. ஆகவே பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கத்தினால் கவனம் செலுத்த வேண்டும்.200 வருடகால வரலாற்று பின்னணியை கொண்டுள்ள மலையக மக்கள் இந்த நாட்டின் மூத்த சமூகமாக இருந்து நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழ்ந்துள்ளார்கள். நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி   நிலமைக்கு மலையக மக்கள் கடுகளவேனும் காரணமானவர்கள் அல்ல. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பினால் எனது தொப்புள் கொடி உறவுகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் உள்ளன. 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் 22 கம்பனிகளிடம் இந்த பெருந்தோட்டங்களை ஒப்படைத்தது. 1992 ஆம் ஆண்டு தோட்டங்களில் காணப்பட்ட. நிலவளம் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பன கணிசமான அளவை குறைந்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள பெருந்தோட்ட கம்பனிகளில்  சுமார்  9 ஆயிரம் காணிகள் காடாக்கப்பட்டுள்ளன.22 கம்பனிகள் என்பது உண்மையல்ல வெறும் கண்துடைப்பே 4 கம்பளிகள் தான் பெருந்தோட்டங்களில் நிர்வாகிக்கின்றது.  அரசாங்கம் கம்பெனிகளிடம் பெருந்தோட்ட நிர்வாகங்களை கையளிக்கும் போது 12 இலட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்தார்ககுறித்தோம்.ஆனால் தற்போது பெருந்தோட்டங்களில் 1 இலட்சத்து 43 ஆயிரத்து பேர் மாத்திரம் தான் தொழில் புரிகிறார்கள் . மலையக பெருந்தோட்ட காணிகள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்பட்டு, காணிகள் சட்ட விரோதமான முறையில் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.பெருந்தொட்ட மலையக மக்களின் காணி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை ஆகியன  அவர்களுக்கு சென்றடைய வேண்டும். நாட்டினுடைய தொழிற்சட்டத்தில் காணப்படும் சலுகைகளும், உரிமைகளும் பெருந்தொட்ட மலையக மக்களையும் சென்றடைய வேண்டுமென வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement