• May 04 2024

9 பேரை மணமுடித்த நபர், விவாகரத்து கோரும் மனைவி: 10வது திருமணம் செய்ய விருப்பம்

Chithra / Dec 1st 2022, 9:25 am
image

Advertisement

நமது நாட்டில் ஆண், பெண் பாலின விகிதம் அதிகரித்து திருமணத்திற்கு துணை கிடைப்பது அரிது என்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ என்பவருக்கு மொத்தம் 9 மனைவிகள் உள்ளனர்.

முதன்முதலில் லுவானா கஜகி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்பே பலதார உறவுமுறையை தேர்ந்தெடுத்து, 8 பேரை மணமுடித்து உள்ளார்.

ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் என்ற தனது முடிவானது அன்பை சுதந்திரமுடன் கொண்டாடுவது மற்றும் ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் வாழ்வது என்பதற்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்று உர்சோ நம்புகிறார்.

இவருக்கு தற்போது ஒன்பது மனைவிகள் உள்ளனர். ஆனால், இதுவும் போதவில்லை என கூறி 10-வது திருமணம் வேறு செய்ய போகிறேன் என கூறுகிறார். 9 மனைவிகள் இருந்தபோதும், இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

அனைத்து மனைவிகளுடனும் எப்படி சண்டை வராமல், ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார் என்பது பற்றி அவர் கூறுவது ஆச்சரியம் வரவழைக்கிறது. மனைவிகளில் ஒருவர் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார் என்பது பற்றியெல்லாம் மற்ற மனைவிகளுக்கு கவலை ஏற்பட்டதே இல்லை.

ஆனால், பரிசு தரும்போது, அவர்களுக்குள் பொறாமை தலை தூக்கி விடுகிறது என அவர் கூறுகிறார்.

தொடக்கத்தில், தாம்பத்யத்திற்கான நேர அனுமதி கிடைத்த பின்பே அது நடந்தது. இந்த நேரத்தில் இவருடன் என பட்டியல் போட்டு தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒரு மகிழ்ச்சியே இல்லாமல், ஏதோ கடமைக்காக நேரபட்டியல் உள்ளதே என்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறோம் என்று பல சமயங்களில் உணர்ந்துள்ளார்.

சில சமயங்களில், ஒருவரை நினைத்து கொண்டே மற்றொருவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டி இருந்தது. இதுபோன்று படுக்கையறையில் ஏற்பட்ட பல சிக்கல்களால், விசயங்கள் இயல்பாக நடக்கட்டும் என நேர பட்டியலை கைவிட்டு விட்டேன் என ஆர்தர் கூறுகிறார்.

ஆனாலும், எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கை உண்மையில் கேளிக்கையும், மகிழ்ச்சியும் மற்றும் தனித்துவம் நிறைந்தது என்று விட்டு கொடுக்காமல் கூறுகிறார்.

இந்நிலையில், அகத்தா என்ற இவரது மனைவி ஆர்தரை விட்டு பிரிவது என முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், தனக்கு மட்டுமே ஆர்தர் வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். அப்படியில்லை என்றால் என்னை மன்னித்து விடவும் என கூறியுள்ளார்.

ஆனால், அது சாத்தியமில்லை என ஆர்தர் மறுத்துள்ளார். ஒரு சாதனைக்காகவே என்னை திருமணம் செய்ய அகத்தா ஒப்பு கொண்டுள்ளார். உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்று வேதனையுடன் கூறும் ஆர்தர் அகத்தாவின் நோக்கம் தவறானது என்றே தனது மற்ற மனைவிகளும் கூறுகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து ஆர்தர், எனது ஒரு மனைவியை இழந்து விட்டாலும் அதனை வேறொருவரை கொண்டு நிரப்ப போவதில்லை என கூறினார்.

ஆனால், திடீரென அவரது எண்ணம் மாறி விட்டது. 9 பேரை திருமணம் செய்துள்ள ஆர்தர், அடுத்து 10-வது திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார். இதுபற்றி ஆர்தர் கூறும்போது, வாழ்வில் 10 திருமணங்களை செய்ய வேண்டும் என கற்பனை செய்து வைத்திருந்தேன்.

எனக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். ஆனால், எனது அனைத்து மனைவிகளிடம் இருந்தும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என நான் விரும்புகிறேன். அனைவர் மீதும் நான் ஒரே அளவிலான அன்பையே செலுத்துகிறேன்.

ஓரிரு மனைவியின் வழியே மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்வது என்பதுநியாயமில்லாதது போல் எனக்கு தோன்றுகிறது என்று ஆர்தர் கூறுகிறார்.

9 பேரை மணமுடித்த நபர், விவாகரத்து கோரும் மனைவி: 10வது திருமணம் செய்ய விருப்பம் நமது நாட்டில் ஆண், பெண் பாலின விகிதம் அதிகரித்து திருமணத்திற்கு துணை கிடைப்பது அரிது என்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ என்பவருக்கு மொத்தம் 9 மனைவிகள் உள்ளனர்.முதன்முதலில் லுவானா கஜகி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்பே பலதார உறவுமுறையை தேர்ந்தெடுத்து, 8 பேரை மணமுடித்து உள்ளார்.ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் என்ற தனது முடிவானது அன்பை சுதந்திரமுடன் கொண்டாடுவது மற்றும் ஒரு நேரத்தில் ஒரு துணையுடன் வாழ்வது என்பதற்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்று உர்சோ நம்புகிறார்.இவருக்கு தற்போது ஒன்பது மனைவிகள் உள்ளனர். ஆனால், இதுவும் போதவில்லை என கூறி 10-வது திருமணம் வேறு செய்ய போகிறேன் என கூறுகிறார். 9 மனைவிகள் இருந்தபோதும், இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.அனைத்து மனைவிகளுடனும் எப்படி சண்டை வராமல், ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார் என்பது பற்றி அவர் கூறுவது ஆச்சரியம் வரவழைக்கிறது. மனைவிகளில் ஒருவர் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார் என்பது பற்றியெல்லாம் மற்ற மனைவிகளுக்கு கவலை ஏற்பட்டதே இல்லை.ஆனால், பரிசு தரும்போது, அவர்களுக்குள் பொறாமை தலை தூக்கி விடுகிறது என அவர் கூறுகிறார்.தொடக்கத்தில், தாம்பத்யத்திற்கான நேர அனுமதி கிடைத்த பின்பே அது நடந்தது. இந்த நேரத்தில் இவருடன் என பட்டியல் போட்டு தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒரு மகிழ்ச்சியே இல்லாமல், ஏதோ கடமைக்காக நேரபட்டியல் உள்ளதே என்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறோம் என்று பல சமயங்களில் உணர்ந்துள்ளார்.சில சமயங்களில், ஒருவரை நினைத்து கொண்டே மற்றொருவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டி இருந்தது. இதுபோன்று படுக்கையறையில் ஏற்பட்ட பல சிக்கல்களால், விசயங்கள் இயல்பாக நடக்கட்டும் என நேர பட்டியலை கைவிட்டு விட்டேன் என ஆர்தர் கூறுகிறார்.ஆனாலும், எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கை உண்மையில் கேளிக்கையும், மகிழ்ச்சியும் மற்றும் தனித்துவம் நிறைந்தது என்று விட்டு கொடுக்காமல் கூறுகிறார்.இந்நிலையில், அகத்தா என்ற இவரது மனைவி ஆர்தரை விட்டு பிரிவது என முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், தனக்கு மட்டுமே ஆர்தர் வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். அப்படியில்லை என்றால் என்னை மன்னித்து விடவும் என கூறியுள்ளார்.ஆனால், அது சாத்தியமில்லை என ஆர்தர் மறுத்துள்ளார். ஒரு சாதனைக்காகவே என்னை திருமணம் செய்ய அகத்தா ஒப்பு கொண்டுள்ளார். உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்று வேதனையுடன் கூறும் ஆர்தர் அகத்தாவின் நோக்கம் தவறானது என்றே தனது மற்ற மனைவிகளும் கூறுகின்றனர் என தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து ஆர்தர், எனது ஒரு மனைவியை இழந்து விட்டாலும் அதனை வேறொருவரை கொண்டு நிரப்ப போவதில்லை என கூறினார்.ஆனால், திடீரென அவரது எண்ணம் மாறி விட்டது. 9 பேரை திருமணம் செய்துள்ள ஆர்தர், அடுத்து 10-வது திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார். இதுபற்றி ஆர்தர் கூறும்போது, வாழ்வில் 10 திருமணங்களை செய்ய வேண்டும் என கற்பனை செய்து வைத்திருந்தேன்.எனக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். ஆனால், எனது அனைத்து மனைவிகளிடம் இருந்தும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என நான் விரும்புகிறேன். அனைவர் மீதும் நான் ஒரே அளவிலான அன்பையே செலுத்துகிறேன்.ஓரிரு மனைவியின் வழியே மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்வது என்பதுநியாயமில்லாதது போல் எனக்கு தோன்றுகிறது என்று ஆர்தர் கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement