• Aug 29 2025

இனப்படுகொலைக்கு சாட்சியாக காணப்படும் செம்மணி புதைகுழி; உறவுகளின் போராட்டத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு

Chithra / Aug 28th 2025, 2:33 pm
image

 

இனப்படுகொலை சாட்சியாக காணப்படும் செம்மணியில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறித்த போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் -

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு விடயம்.

அதன்படி போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்கும். அத்துடன் போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதேநேரம் குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து செம்மணியில் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியாயமான போராட்டத்தை பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இனப்படுகொலைக்கு சாட்சியாக காணப்படும் செம்மணி புதைகுழி; உறவுகளின் போராட்டத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு  இனப்படுகொலை சாட்சியாக காணப்படும் செம்மணியில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறித்த போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் -எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு விடயம்.அதன்படி போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்கும். அத்துடன் போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.இதேநேரம் குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து செம்மணியில் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நியாயமான போராட்டத்தை பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement